ரிதிமா நான் கர்ப்பமாக இருக்கிறேனா என்று நினைத்தபடி இதை நான் கண்டிப்பாக உறுதி செய்தே ஆக வேண்டும் வன்ஷ் எதையும் உறுதிப்படுத்தாமல் யாருக்குமே சொல்ல மாட்டார் என்று நினைக்கிறார். இஷாணி வன்ஷை பார்த்து எதற்காக நீங்கள் என் குழந்தையை காப்பாற்றவில்லை கண்டிப்பாக என் குழந்தையை காப்பாற்றுவதாக சத்தியம் செய்துள்ளீர்களே என்று அழுகிறாள். அதற்கு வன்ஷ் எவ்வளவோ முயற்சி செய்தும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை அந்த கடவுளுக்கே இந்த குழந்தை பூமியில் பிறப்பதில் உடன்பாடு இல்லை போல எல்லாமே விதிப்படி தான் நடக்கிறது நீ இப்போது ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாய் என்று கூறுகிறார். ரிதிமா மற்றும் ஆங்றி இஷாணியின் அறைக்குள் வருகிறார்கள். ரிதிமா இஷாணியை பார்த்து உன்னுடைய வலி எனக்கு நன்றாகவே தெரிகிறது நீங்கள் கண்டிப்பாக தைரியமாக இருக்க வேண்டிய நேரமிது என்று கூற அதற்கு இஷாணி அந்த வலி உனக்கு புரியாது இங்கிருந்து செல்லுமாறு வன்ஷிடம் கூறுகிறார். வன்ஷ் ரிதிமாவுடன் அறையைவிட்டு வெளியே செல்கிறார். ரிதிமா நான் கர்ப்பமாக இருக்கிறேன் போல் உள்ளது என்று நினைக்கிறார். இஷாணி தனிமையிலிருக்க வேண்டும் என கூறி ஆங்றியையும் செல்ல சொல்கிறார். ஆங்றிஅ ங்கிருந்து வெளியேறுகிறார். இஷாணி வன்ஷ{டனான பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்கிறார். வன்ஷ் அப்படி சொல்லியிருக்க கூடாது என்று நினைக்கிறார். தானும் வன்ஷ{ம் சேர்ந்து எடுத்து சிறுவயது படங்களை பார்த்து அழுகிறாள். வன்ஷ{டன் தான் இருக்கும் படங்களிலிலிருந்து வன்ஷை கிழித்து குப்பைத் தொட்டிக்குள் எறிகிறார். எனக்கு இந்த வலியை கொடுத்து ரிதிமாவை காப்பாற்றியிருக்கீர்கள் அதனால் நான் என்னுடைய குழந்தையை இழந்து விட்டேன் என்கிறாள். எங்களுக்குள் இருந்த இந்த உறவை ரிதிமா பறித்துவிட்டாள் அவளை நான் முழுமையாக வெறுக்கிறேன் என் அண்ணனை என்னிடமிருந்து பிரித்து விட்டாள் என்று அழுகிறாள்.
இஷாணி வலியிலிருப்பதை நினைத்தபடி அவளுக்கு என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்று கவலையுடன் வன்ஷ் பாஸ்கற் போல் விளையாடுகிறார். அவர்களின் சிறுவயதில் நடந்த சிலவற்றை நினைத்துப்பார்க்கிறார். வன்ஷின் துப்பாக்கி குண்டு பட்ட காலிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இஷாணி படிக்கட்டில் தள்ளாடியபடி நடந்து வந்து கொண்டிருந்த போது கால் இடறி விழ போக கபீர் அவளை தாங்கிப்பிடிக்கிறார். இஷாணி அண்ணா என்று கூற அதற்கு நான் கபீர் என்று சொல்கிறார். அதற்கு இஷாணி நீங்களும் எனக்கு அண்ணன் போல தான் என்று சொல்கிறாள். கபீர் எதற்காக இப்போ அறையைவிட்டு வெளியே வந்தாய் ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்க ஆரியன் கூறியது உண்மை தான் ஆபத்தான சூழ்நிலையில் வன்ஷ் காப்பாற்ற வேண்டியது ரிதிமாவா இல்லை நானா என்கிற நிலையில் கண்டிப்பாக வன்ஷ் ரிதிமாவை தான் காப்பாற்றுவார் என்று சொல்கிறாள்.
இஷாணி மேலும் சொல்கிறாள் இன்று நான் என் குழந்தையை ரிதிமாவால் தான் இழந்துவிட்டேன் என்று. அதற்கு கபீர் இப்போது தான் என்னை அண்ணன் என்று கூறிவிட்டு அழுகிறாய் வன்ஷ் ரிதிமாவிற்காக இருந்தால் நான் கண்டிப்பாக உனக்காக இருப்பேன் அந்த ஷ{ட்டரை கண்டிப்பாக தண்டிப்பேன் என்று கூறுகிறார். இஷாணி கபீரை கட்டியணைக்கிறார். கபீர் நினைக்கிறார் இஷாணியை வன்ஷிடமிருந்து என்பக்கம் எடுத்துவிட்டேன். கூடியவிரைவில் ரிதிமாவையும் என்பக்கம் எடுத்துவிடுவேன் என்று. சமையலறையில் ரிதிமா சூப் செய்து கொண்டிருக்கிறார் அப்போது அடுப்பின் அருகிலிருந்த துணியில் நெருப்பு பற்றியிருந்தது அதை ரிதிமா கவனிக்கவில்லை கபீர் வந்து ரிதிமாவை பிடித்து இழுத்துவிட்டு நெருப்பிலிருந்து காப்பாற்ற தான் இப்படி செய்தேன் என்று கூறி மன்னிப்பு கேட்கிறார். நான் உன்னுடன் பேச வேண்டும் கபீர் மிகவும் கவலையாக இருக்கிறார் கண்டிப்பாக உன்னால் மட்டும் தான் அவரை சரி செய்ய முடியும் என்று கபீர் சொல்ல அதற்கு ரிதிமா நான் இஷாணிக்கு சூப் கொடுத்துவிட்டு வன்ஷிடம் தான் செல்ல போகிறேன் என்று சொல்கிறாள். அதற்கு கபீர் நான் இந்த சூப்பை இஷாணிக்கு கொடுக்கிறேன் நீ வன்ஷிடம் செல் என்று சொல்ல ரிதிமாவும் கபீருக்கு நன்றி சொல்லி விட்டு செல்கிறாள். ரிதிமா செல்ல கபீர் நினைக்கிறார் வன்ஷ{டைய எல்லாமே எனதாக போகிறது ஒரு நாள் ரிதிமாவும் என்னுடைய உணர்வுகளை புரிந்து கொள்வாள் இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறார். ரிதிமா வன்ஷிடம் செல்கிறாள் வன்ஷ் அவளை அங்கிருந்து செல்லும் படி சொல்கிறார்.
ரிதிமா வன்ஷை முத்தமிட்டுவிட்டு நீங்கள் தனிமையை விரும்பவேண்டாம் இப்போது நீங்கள் ரொம்பவே கவலையாக இருக்கிறீங்கள் என்று சொல்ல இஷாணிக்கு நடந்த அனைத்திற்கும் நான் தான் காரணம் அவளுடைய குழந்தை கூட என்னால் தான் அழிந்துவிட்டது என்று சொல்கிறார். அதற்கு ரிதிமா அப்படி இல்லை நீங்கள் உங்கள் மேலே குற்றம் சாட்ட வேண்டாம் உங்களை நீங்கள் வெறுப்பதை நிறுத்துங்கள் இதெல்லாம் என்னால் தான் நடந்தது என்று ரிதிமா சொல்கிறார். அதற்கு வன்ஷ் உன்னை நீ குற்றம் சாட்டுவதை நிறுத்து என்று சொல்ல ரிதிமா அவரை சமாதானப்படுத்துகிறார். எப்போதுமே நீங்கள் உங்கள் குடும்பத்தை காப்பாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள் என் கண்களில் தெரியும் உங்களை பாருங்கள் அதில் நிறையவே அன்பும் மரியாதையும் தான் தெரிகிறது என்று சொல்லி அவரை அமர வைக்கிறாள். இது எங்களுடைய கஷ்ட காலம் இஷாணி குழந்தையை இழந்துவிட்டாள் இது எங்கள் யாருடைய கையிலும் இல்லை என்கிறாள்.
ரிதிமா வன்ஷை உணவருந்தும் படி கேட்க வன்ஷ் மறுபக்கம் திரும்புகிறார். கூரியர் ஒன்று ரிதிமாவுக்கு வர அதை கபீர் வாங்குகிறார். ரிதிமா மறுபடி தலைசுற்றுவது போல உணர்ந்து தள்ளாட வன்ஷ் என்னாச்சு உன் உடலுக்கு ஏதாவது உணவு ஒத்துவரவில்லையா என்று கேட்க ரிதிமாவும் ரொம்பவே ரென்ஷன் ல இருந்ததால உடம்பு சற்று களைப்பாக இருக்கிறது என்கிறார். அதற்கு வன்ஷ் அவளின் உடல்நலத்தை பார்த்துக்கொள்ளும் படி கூறி மருந்து எடுத்து தரவா என்று கேட்க அதற்கு ரிதிமா எதுவும் வேண்டாம் சற்று நேரம் ஓய்வெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்கிறாள். வன்ஷ் ரிதிமாவை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு வெளியே செல்கிறார். இன்னும் கூரியர் ஏன் வரவில்லை என்று நினைத்தபடி ரிதிமா இருக்க கபீர் வந்து கதவை தட்டி பார்சலை கொடுக்கிறார். ரிதிமா அவருக்கு நன்றி சொல்கிறார். கபீர் பார்சலை திறந்து பார்த்து ரிதிமா கற்பமாக இருக்கிறாளா? அவள் இவ்வாறு நடக்க எப்படி அனுமதிக்கலாம்? அவள் இப்போது வன்ஷ{டன் இருக்கிறாள் என்னுடைய விதி எனக்கு உதவி செய்யும் வாழ்த்துக்கள் ரிதிமா என்னிடம் ஒரு தி;ட்டம் இருக்கிறது என்று அவளின் படத்தை பார்த்து கூறியதை நினைக்கிறார். கடவுள் எப்போதுமே எனக்கான கதவுகளை திறந்தபடியே இருப்பார் என்று சொல்கிறார். வன்ஷ் உடைமாற்றி வந்து ரிதிமாவை ஓய்வெடுக்கும் படி கூறி வேலை நிமித்தம் வெளியே செல்கிறார். ரிதிமா பரிசோதித்து பார்க்கிறார். வெளியே வந்து நான் வன்ஷின் குழந்தைக்கு அம்மாவாக போகிறேன் என்று சொல்கிறார்.
Update Credit to: Arunthathi Kanagaratnam (AK) Kanex Media
#Riddhima #VanshRaisinghania
#Vansh #kabir #immj
#immj2 #IshqMeinMarjawan2
#IshqMeinmarjwan2
#helly
#RrahulSudhir
#vishalvashishtha
#hellyshah
#rrahul
#riansh
#IMMJ
#IMMJ2










No comments:
Post a Comment