Monday, 8 February 2021

Ishq Mein Marjawan 2 - IMMJ2 Episode 187 Hindi Serial 8th February 2021 written update in Tamil





வன்ஷ் மற்றும் ரிதிமா இஷாணியை வாழ்த்துகிறார்கள். இஷாணி கேக் வெட்ட அனைவரும் சேர்ந்து நடனம் ஆடும் போது கபீர் ரிதிமாவையும் வன்ஷையும் பார்க்கிறார். ஷ{ட் பண்ண வந்தவர் ரிதிமாவையும் வன்ஷையும் குறிபார்க்கிறார். அனைவரும் மாறி மாறி நடனமாட வன்ஷ் ரிதிமாவை கட்டியணைத்து நடனமாடுகிறார். வன்ஷ் மறுபடி இஷாணிக்கு மறுபடி வாழ்த்து சொல்கிறார். இஷாணி அனைவரையும் குடும்பபடம் எடுக்க அழைக்க வன்ஷ{ம் செல்கிறார். யாரோ ஒருவர் ஷ{ட் பண்ண வந்தவருக்கு போன் பண்ண எனக்கு நேரமாகிறது கண்டிப்பாக இன்று இதை முடித்துவிடுவேன் என்று சொல்கிறார். இஷாணி கபீரையும் குடும்ப படத்தில் இணையும் படி கூறி இந்த படம் நீங்கள் இல்லாமல் முழுமை பெறாது வன்ஷ் உயிரை காப்பாற்றி இருக்கிறீர்கள் என்று சொல்ல கபீர் சென்று வன்ஷ் அருகில் நிற்கிறார். ரிதிமாக்கு லேசாக தலை சுற்றி தடுமாற வன்ஷ் அவரை தாங்கிப்பிடிக்கிறார். போட்டோ எடுப்பவர் குடும்ப படத்தை எடுக்கிறார். ஷ{ட் பண்ண வந்தவர் நஞ்சு கலந்த ஊசியை எடுத்து சுடுகிறார். அதை சரியான நேரத்தில் பார்த்த வன்ஷ் ரிதிமாவை தள்ளிவிட்டு காப்பாற்றுகிறார். 


அந்த நஞ்சு ஊசி இஷாணி கையில் குத்துகிறது. இஷாணி கத்துகிறார் அனைவரும் அவளை பார்க்கிறார்கள். வன்ஷ் அந்த ஷ{ட் பண்ண வந்தவரை பிடிக்க செல்ல எழுந்து வர கபீர் அவரை ரிதிமாவுடன் இருக்கும்படி கூறி தானே அவனைப்பிடித்து வருவதாக சொல்கிறார். வன்ஷ் அந்த ஷ{ட் பண்ண வந்தவனை தப்பிக்க விடாமல் பிடித்துவரும்படி சொல்கிறார். கபீரும் ஆரியனும் அவனை துரத்திக்கொண்டு ஓடுகிறார்கள். வன்ஷ் இஷாணியின் வயிற்றிலுக்கும் குழந்தையை நினைத்து வருந்துகிறார். கபீர் ஷ{ட் பண்ண வந்தவரை பிடித்து உனக்கு என்ன தைரியம் என்னுடைய ரிதிமாவை கொல்ல அவளை என்னால் இழக்க முடியாது ஒரு வேளை அவள் இறந்தால் நானும் இறந்துவிடுவேன் என்று சொல்லியபடி அவனை அடிக்கிறார். அவனை அடிப்பதற்காக பெரிய கல் ஒன்றை எடுக்க ஆரியன் வந்து அவனை கொல்ல வேண்டாம் என்று தடுக்கிறார். கபீரும் சரி என்று கூறி ஆரியனை இஷாணியிடம் செல்லும்படி சொல்கிறார். ரிதிமா போன் பேசிவிட்டு டாக்டர் வந்துகொண்டிருக்கிறார் என்று சொல்கிறார். வன்ஷ் இஷாணியை மயக்கமடைய விடாமல் பேச்சு கொடுத்துகொண்டு இருக்கிறார். உனக்கும் உன் குழந்தைக்கும் எதுவும் ஆகாது என்று ஆறுதல் சொல்கிறார். டாக்டர் அங்கு வர வன்ஷ் இஷாணிக்கும் குழந்தைக்கும் எதுவுமே ஆகக் கூடாது என்று சொல்ல டாக்டர் அவரை பரிசோதிப்பதாக சொல்கிறார். இஷாணியை பரிசோதித்த டாக்டர் அவளின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் உடனடியாக ஆபரேஷன் பண்ண வேண்டும் என்று சொல்கிறார். 


வன்ஷ் கோவமாக துப்பாக்கியை எடுத்து கண்ணாடியை நோக்கி சுடுகிறார். உடைந்த கண்ணாடியில் தன்னை பார்த்துபடி நிற்க ரிதிமா வந்து இது உங்களுடைய தவறு இல்லை உங்களை நீங்களே வருத்திக்கொள்ள வேண்டாம் என்று சொல்ல அதற்கு வன்ஷ் யாரோ என்னை ஏமாற்றியதற்காக நான் எதிரியால் தாக்கப்பட அது தவறி என் கர்ப்பமான தங்கையை காயப்படுத்திவிட்டது என்னால் அவளை பாதுகாக்க முடியவில்லை என்று சொல்கிறார். நான் எதிரி தப்பித்து செல்ல முன்பு அவனை நான் பிடித்தாக வேண்டும் என்னுடைய குடும்பம் ஆபத்திலிருக்கிறது அவன் மேலும் ஆபத்தை விளைவிக்க முன்பு அவனை எங்கு அனுப்ப வேண்டுமோ அங்கு அனுப்பிவிடுகிறேன் என்று சொல்ல அதற்கு ரிதிமா நீங்கள் இப்போது இஷாணி கூட இருப்பது ரொம்பவே முக்கியமானது என்று ரிதிமாவின் கைகளை இறுக்கிப்பற்றிப்பிடித்தபடி கூறுகிறார். அப்போது ரிதிமாவின் முகம் வலியில் மாற்றமடைய அதை உணர்ந்த வன்ஷ் மன்னிப்பு கேட்கிறார். ரிதிமா வன்ஷை அமைதியாக இருக்கும்படி கூறி இப்போது எங்களுக்கு இஷாணி தான் முக்கியம் அவள் சுய நினைவுக்கு வந்ததும் கண்டிப்பாக உங்களை தான் தேடுவாள் இப்போது வைத்தியர் இஷாணியை பார்க்கிறார் எதுவுமே தப்பாக நடக்காது என்று சொல்ல ஆரியன் அங்கு வந்து டாக்டர் இஷாணி அறையை விட்டு வெளியில் வந்துவிட்டார் என்று சொல்கிறார். 


இஷாணியின் நிலைமை ரொம்ப மோசமாக இருப்பதாகவும் உடனடியாக அவளுக்கு ஆபரேஷன் பண்ணியாகணும் என்று டாக்டர் சொல்கிறார். அதற்கு மற்ற டாக்டர் இப்போ அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாது அவரை காப்பாற்றுவதற்கான வாய்ப்புக்கள் ரொம்பவே குறைவாக இருக்கிறது என்று சொல்கிறார். கபீர் கோவமாக டாக்டரின் சட்டையை பிடித்து இஷாணிக்கோ குழந்தைக்கோ ஏதாவது ஆகினால் உங்களை உயிருடனே விட மாட்டேன் அவள் இந்த வீட்டு மகாராணி என்று சொல்ல ஆரியன் கபீரை தடுக்கிறார் வன்ஷ் கபீர் சார்பாக டாக்டரிடம் மன்னிப்பு கேட்டு எப்படியாவது இஷாணியை காப்பாற்றும் படி சொல்கிறார். சியாவும் ரிதிமாவும் அழுதபடி நிற்க சாஞ்சல் இஷாணிக்கு அதிகளவான இரத்தம் வெளியேறிவிட்டதால் ஆபத்தான நிலைமை என்று சொல்கிறார். அதற்கு ரிதிமா நாங்கள் நம்பிக்கை இழக்க கூடாது கண்டிப்பாக கடவுள் நம்மை கைவிட மாட்டார் என்று கூறி சாமி அறைக்கு செல்கிறார். அப்போது தலை சுற்றி விழ போக கபீர் வந்து அவரை தாங்கிப்பிடிக்க ரிதிமா நன்றி சொல்கிறார். கபீர் அவளின் உடல்நிலையை கவனித்துக்கொள்ளும் படி சொல்ல அதற்கு ரிதிமா நான் சாமிக்கு தீபமேற்றி வழிபட தான் வந்தேன் என்று சொல்கிறாள். கபீர் ரிதிமாவை தாங்கிப்பிடித்த தன்னுடைய கைகளை முத்தமிடுகிறார். ரிதிமா மறுபடி தலைசுற்றி குமட்டலை உணர்கிறார். தன்னுடைய உடல்நிலை பற்றி இப்போது வன்ஷிற்கு சொல்ல கூடாது ஏற்கனவே இஷாணியை பற்றிய கவலையில் இருக்கிறார் என்று நினைக்கிறார். இஷாணிக்கும் அவளின் குழந்தைக்குமாக கடவுளிடம் வேண்டிக்கொண்டு தீபம் ஏற்றி வைக்கிறார். அந்த ஆராத்தி அணைகிறது. பாட்டிம்மா இல்லை என்று சத்தமிடுகிறார். டாக்டர் வந்து நாங்கள் இஷாணி மற்றும் குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்தோம் எங்களால் இஷாணியை மட்டும் தான் காப்பாற்ற முடிந்தது என்று சொல்கிறார். வன்ஷ் இஷாணியையும் குழந்தையையும் காப்பாற்றுவதாக இஷாணிக்கு கூறிய வார்த்தைகளை நினைத்துப்பார்க்கிறார். நீங்கள் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும் இன்னும் சிறிது நேரத்தில் நீங்கள் இஷாணியை பார்க்கலாம் என்று சொல்கிறார். வன்ஷ் தன்னால் இஷாணியை பார்க்க முடியாது மிகவும் குற்றவுணர்வாக இருக்கிறது என்று சொல்ல அதற்கு ரிதிமா அப்படி சொல்ல வேண்டாம் கண்டிப்பாக இப்போ இஷாணிக்கு உங்களின் ஆறுதல் தேவை உங்களால் மட்டுமே அவளை சமாளிக்க முடியும் என்று சொல்கிறாள். 


ஆங்றி அதிர்ச்சியாக அமர்ந்திருக்கிறார். வன்ஷ் இஷாணியிடம் செல்கிறார். வன்ஷ் இஷாணிக்கு பொம்மைகள் வாங்கிக் கொடுத்து மகிழ்வித்ததை நினைத்துப் பார்க்கிறார். இஷாணி வன்ஷை பார்த்து எதற்காக கவலையாக அழுது கொண்டு இருக்கிறீர்கள் ஏதாவது தவறாக நடந்துவிட்டதா என்று கேட்கிறாள். ரிதிமா டாக்டர் போனில் பேசிக்கொண்டிருப்பதை கேட்கிறாள். அப்போது டாக்டர் இந்த அறிகுறிகளைப் பார்க்கையில் நீங்கள் கர்ப்பமாக இருப்பது போல உள்ளது என்று சொல்ல ரிதிமா தனக்கும் இதே போன்ற அறிகுறி தானே தென்படுகிறது அப்போ நானும் கர்ப்பமாக இருக்கிறேனா என்று நினைக்கிறாள். இஷாணி தன்னுடைய குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை தானே என்று வன்ஷை கேட்கிறாள். அதற்கு வன்ஷ் என்னை மன்னித்து விடு உனக்கு சத்தியம் செய்தது போல உன் குழந்தையை என்னால் காப்பாற்ற முடியவில்லை என்று சொல்கிறார். இல்லை என்று கூறியபடி இஷாணி வன்ஷை கட்டியணைத்து அழுகிறாள்.

Update Credit to: Arunthathi Kanagaratnam (AK) Kanex Media

#Riddhima #VanshRaisinghania 
#Vansh #kabir #immj 
#immj2 #IshqMeinMarjawan2 
#IshqMeinmarjwan2
#helly 
#RrahulSudhir 
#vishalvashishtha 
#hellyshah 
#rrahul 
#riansh 
#IMMJ 
#IMMJ2

No comments:

Post a Comment