Wednesday, 10 February 2021

Ishq Mein Marjawan 2 - IMMJ2 Episode 189 Hindi Serial 10th February 2021 written update in Tamil





ரிதிமா நான் அம்மாவாக போகிறேன் என்று தங்களின் திருமண படத்தை பார்த்துக் கூறியபடி நிற்கிறார். கபீர் ரிதிமா உன்னால் இந்த விடயத்தை வன்ஷிடம் சொல்ல முடியாது நான் எதையும் செய்ய தேவையில்லை நீ கண்டிப்பாக என்னை நெருங்கி வருவாய் என்று தோணுகிறது என்று நினைக்கிறார். வன்ஷ் அறைக்குள் வந்து ரிதிமா திருமண படத்தை பார்த்துக்கெண்டிருப்பதை பார்த்து நீ நல்லா இருக்கிறியா என்று கேட்க அதற்கு ஆமா என்று ரிதிமா சொல்கிறாள். அதற்கு வன்ஷ் எங்கள் படத்தை பார்த்து நீ ஏதாச்சும் காதல் மந்திரம் போடுகிறாயா என்று கேட்க ரிதிமா ஆமா வாழ்க்கை சில அழகான விடயங்களை கொடுக்கும் அது எங்களை சந்தோஷபட வைக்கும் என்று சொல்ல அது என்ன என்று வன்ஷ் கேட்கிறார். அந்த நேரத்தில் ஆங்றி அங்கு வந்து இஷாணியை பற்றி கூறுகிறார். இஷாணி தீப்பெட்டி எங்கே என்று சத்தமிட்டபடி வன்ஷ் வாங்கிக்கொடுத்த குழந்தைக்கான பொருட்கள் பொம்மைகள் எல்லாவற்றையும் எரிக்கிறாள். ஆங்றி, ரிதிமா மற்றும் வன்ஷ் அங்கு வருகிறார்கள். வன்ஷ் இப்படி செய்ய வேண்டாம் என்று தடுக்க ஆங்றி நெருப்பின் மேல் தண்ணீர் ஊற்றி அணைக்கிறார். வன்ஷ் இஷாணியை அந்த இடத்தை விட்டு அழைத்துச்செல்ல நான் எல்லாவற்றையும் அழிக்க வேண்டும் என்று கூறி அழுகிறாள். 

வன்ஷ் இஷாணியிடம் மன்னிப்பு கேட்கிறார். தான் கர்ப்பமாக இருக்கும் விடயத்தை வன்ஷிடம் சொல்வதற்கு இது சரியான நேரமில்லை என்று ரிதிமா நினைக்கிறாள். வன்ஷ் மற்றும் ஆங்றி அறையை விட்டு வெளியே வர இஷாணி ரிதிமாவின் கைகளை பிடித்து நிறுத்தி உன்னால் தான் நான் என் குழந்தையை இழந்து நிற்கிறேன் என்று கூறுகிறாள். ரிதிமா அழுதபடி நினைக்கிறாள் ஒரு வேளை வன்ஷ் என்னைக் காப்பாற்றியிருக்காவிட்டால் நான் தாக்கப்பட்டிருப்பேன் அப்படியென்றால் என் குழந்தை…. என்று நினைக்கிறாள். ரிதிமா அவளுடைய கர்ப்பத்திற்கான உறுதிப்படுத்தல் றிப்போட்டை பெறுகிறாள். எப்படி இந்த குடும்ப நிலைமையில் நான் என் குழந்தையை பற்றி சொல்ல முடியும் என்று நினைத்து கடவுளை வேண்டிக்கொள்கிறாள். எல்லாருமே இங்கு கவலையில் இருக்கிறார்கள் இது என்னுடைய சந்தோஷத்தை சொல்வதற்கான சரியான நேரமில்லை என்று நினைக்கிறாள். சஞ்சல் இஷாணியை அழைத்துக்கொண்டு வெளியே வருகிறார். இஷாணி இந்த ரிப்போட்டை பார்த்தால் கவலையடைவார் என்று ரிதிமா நினைக்கிறாள். சஞ்சல் அழைக்க ரிதிமா தடுமாறுகிறார் அப்போது ரிப்போட் கீழே விழு கபீர் ரிப்போட்டை எடுத்து நன்றி என்னுடைய ரிர்போட்டை கொடுத்ததற்கு என்று சொல்கிறார். சஞ்சல் என்ன ரிப்போட் என்று கேட்க எனக்கு லேசாக காய்ச்சல் அது தான் கோவிட் டெஸ்ட் எடுத்துப்பார்த்தேன் எதுவம் தப்பாக இல்லை என்று சொல்ல சஞ்சல் இயங்கை மருந்து சாப்பிடும்படி சொல்லிவிட்டு செல்கிறார். இஷாணி செல்ல கபீர் ரிதிமா என்று அழைத்து நான் இதை யாருக்கும் சொல்லவில்லை என்று கூற ரிதிமா அந்த இடத்தை விட்டு செல்கிறார். நான் நினைத்தது சரி ரிதிமா கர்ப்பமாகதான் இருக்கிறார் என்று கபீர் நினைக்கிறார். 

கபீரும் வன்ஷிம் காரில் வந்து கொண்டிருந்தார்கள். கபீர் லிப்ட் கொடுத்ததற்காக வன்ஷிற்கு நன்றி சொல்கிறார். இஷாணிக்கு நடந்த விடயத்திலிருந்து சற்று வெளியே வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் என கபீர் வன்ஷிற்கு கூற அதற்கு வன்ஷ் நீ எங்கள் வீட்டில் தங்க மட்டும் தான் அனுமதிக்கப்ட்டிருக்கிறாய் என்னுடைய விடயங்களில் தலையிட இல்லை என்று கோவமாக கூறுகிறார். அந்த நேரத்தில் ரேடியோவில் இன்று ரோஜா தினம் என்று சொல்ல வன்ஷ் வரும் வழியிலிருக்கும் றோஜா பூ கடையில் நிற்கிறார். அப்போது ஒரு பெண் கைக்குழந்தையுடன் வந்து வன்ஷ் என்று பெயர் சொல்லி அழைக்க வன்ஷ் திரும்பிப்பார்க்கிறார் அப்போது அந்த பெண் தன்னுடைய குழந்தையை கொல்லும்படி சொல்ல வன்ஷ் திகைத்துப்போய் நிற்கிறார். 

என்னுடைய குழந்தை அனாதையானதற்கு நீ தான் காரணம் நீ சுட்டதில் தான் என் கணவர் இறந்தார் என்று சொல்ல வன்ஷ் வைர பிரச்சினையில் தான் சுட்டதை நினைத்துப்பார்க்கிறார். ஒரு குழந்தை தந்தையில்லாமல் வளர்வது எவ்வளவு கடினம் தெரியுமா என்று அந்த பெண் கேட்கிறார். வன்ஷ் தன்னுடைய சிறுவயதில் சிறுவர் நன்னடத்தை மையத்தில் அனுபவித்த கஷ்டங்களை நினைத்துப்பார்க்கிறார். அந்த குழந்தைக்குரிய எதிர்கால செலவு அனைத்தையும் தானே ஏற்றுக்கொள்வதாக வன்ஷ் சொல்ல அதற்கு அந்த பெண் நீ என்றுமே ஒரு குழந்தைக்கு தந்தையாகி விடாதே இதற்கான தண்டனையை உன்னுடைய குழந்தை அனுபவிக்கும் என்று சொல்லி திட்டுகிறாள். அப்போது வன்ஷ் தான் தந்தையாக கூடாது எனக்கு எதுவும் ஆகிவிட்டால் என்னுடைய குழந்தையும் தந்தை இல்லாமல் வளர கூடாது என்று சொல்கிறார். அதைக் கேட்ட கபீர் வன்ஷ் தந்தையக விரும்பவில்லை ஆனால் ரிதிமா கற்பமாக இருக்கிறாள் என்ன ஒரு விதியின் விளையாட்டு என்று நினைக்கிறார். அவர்கள் காரில் செல்கிறார்கள். ரிதிமா அவளுடைய நோயாளி ஒருவருடன் பேசுகிறார் அப்போது ருத்ரா வந்து வன்ஷ் எங்கே என்று கேட்க அவர் வெளியில் சென்று விட்டதாக சொல்ல அந்த நேரத்தில் வன்ஷ் வருகிறார். ருத்ரா வேலை சம்பந்மாக பேச வன்ஷ் அவரை திட்டுகிறார் ரிதிமா அவரை தடுக்க வன்ஷ் ஏதோ குழப்பத்தில் வந்தேன் அது தான் அப்படி பேசி விட்டேன் மன்னிக்கும் படி கூறி அந்த பைலை வைத்துவிட்டு செல்லும் படி சொல்கிறார். ருத்ரா பைலை கொடுத்துவிட்டு செல்கிறார். 

வன்ஷ் அந்த பெண்மணி கூறிய வார்த்தைகளை நினைத்துப்பார்த்தபடி இருக்க ரிதிமா வந்து வன்ஷின் மடியில் அமர்ந்து எனக்கு எப்படி உங்கள் கவலையை மறக்க வைக்க வேண்டும் எனக் கூற வன்ஷ் அவளை கட்டியணைத்தபடி என்னுடன் இப்படியே நெருக்கமாக இரு என்னை விட்டு எங்கும் சென்று விடாதே என்று கேட்க எதற்காக இப்படி படபடப்பாக இருக்கிறீர்கள் என்று கேட்க அதற்கு வன்ஷ் நான் இப்படி பயபக்தியுடன் விழிப்புணர்வாக இருந்திருந்தால் என் வாழ்வின் விலைமதிப்பற்றவற்றை இழந்திருக்கமாட்டேன் என்று சொல்லியபடி எழ ரிதிமா வன்ஷை அமர வைக்கிறார். எனக்கு உங்களுடைய மனஅழுத்தத்தை இல்லாமல் செய்யும் வழி தெரியும் என்று கூறி வன்ஷின் கழுத்தை மசாஜ் செய்கிறார். அப்போது நீங்கள் தந்தையாகி விட்டீர்கள் அதை நான் சீக்கிரம் உங்களிடம் சொல்வேன் என்று மனதுக்குள் நினைக்கிறாள். 

ரிதிமா சமையலறையில் சென்று நூடில்ஸ் செய்கிறார். அங்கு வந்த சியா எதற்காக இப்போது நூடிள்ஸ் என்று கேட்க எனக்கு சற்று காரமாக ஏதாவது சாப்பிட தோணுகிறது என்று ரிதிமா சொல்கிறார். அதற்கு சியா உனக்கு இப்போது உடல்நிலை நல்லாக இல்லை பழங்கள் சாப்பிட்டால் தான் நல்லது என்று கூறி பப்பாளிப்ழம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று சொல்கிறார். எவ்வாறு நான் சியாவிற்கு பப்பாளிப்பழம் என்னால் சாப்பிடமுடியாது என்று சொல்வது என்று நினைத்தபடி நான் நன்றாக இருக்கிறேன் பழம் வேண்டாம் என்று சொல்ல நான் வன்ஷிடம் சொல்லவா என்று சியா கேட்க வேண்டாம் என்று என ரிதிமா கூறி நான் என்னுடலை கவனித்துக்கொள்கிறேன் என்று சொல்கிறாள். சியா பப்பாளிப்பழம் சாப்பிடும்படி நீட்ட ரிதிமா யோசித்தபடி நிற்கிறார். சியா இது உடலுக்கு நல்லது என்று கூறி அவளிற்கு ஊட்ட செல்ல கபீர் வந்து அந்த பழத்தை வாங்கி சாப்பிடுகிறார். எனக்கு பப்பாளிபழம் என்றால் மிகவும் பிடிக்கும் நான் இதை சாப்பிடுகிறேன் ரிதிமாவை வேறு ஏதாவது சாப்பிடும் படி சொல்கிறார். சியா இன்னொரு பழம் இருக்கு கெடுக்கிறேன் என்று சொல்ல ரிதிமா வேண்டாம் ஓய்வெடுக்க போகிறேன் என்று கூறிவிட்டு செல்கிறார். 

கபீர் ரிதிமாவை அழைத்து நான் உன்னிடம் பேச வேண்டும் அது உனக்கு சங்கடமாக இருந்தால் மன்னிக்கும்படி சொல்ல ரிதிமா பறவாயில்லை கூற சொல்கிறார். கபீர் நான் உனக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் நீ தாயாவதை நான் தான் முதலில் அறிந்து உள்ளேன் வன்ஷிடம் சொல்லிவிட்டாயா என்று கேட்க இன்னும் இல்லை விரைவாக சொல்ல வேண்டும் என்று ரிதிமா சொல்கிறார். அதற்கு கபீர் ஒரு உண்மையை உனக்கு சொல்லியாகணும் அதாவது உன்னுடைய குழந்தை என்றுமே அதனுடைய தந்தை பாசத்தை அனுபவிக்காது என்று கூற ரிதிமா அதிர்ச்சியுடன் கபீரை பார்க்கிறார்.

Update Credit to: Arunthathi Kanagaratnam (AK) Kanex Media

#Riddhima #VanshRaisinghania 
#Vansh #kabir #immj 
#immj2 #IshqMeinMarjawan2 
#IshqMeinmarjwan2
#helly 
#RrahulSudhir 
#vishalvashishtha 
#hellyshah 
#rrahul 
#riansh 
#IMMJ 
#IMMJ2

No comments:

Post a Comment