Saturday, 6 February 2021

Ishq Mein Marjawan 2 - IMMJ2 Episode 186 Hindi Serial 6th February 2021 written update in Tamil






ரிதிமா எதற்காக நான் இவ்வளவு பலவீனமாக இருக்கிறறேன் இப்படியான குமட்டல் எனக்கு முன்பு இருந்ததே இல்லை என்று யோசிக்கிறார். வன்ஷ் அறைக்குள் வர ரிதிமா எங்கு எதற்காக சென்றீர்கள் என்று கேட்க வன்ஷ் ஒண்ணுமில்லை என்று சொல்கிறார். அதற்கு ரிதிமா நீங்கள் காயப்பட்டிருக்கிறீர்கள் எதற்காக சும்மா சுத்திட்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு ஓய்வு வேணும் நான் உங்களுக்கு தண்ணீர் கொடுக்கவா என்று கேட்கிறார். அதற்கு வன்ஷ் எனக்கு ஒரு நல்ல வைத்தியர் கூடவே இருக்கும் போது எதற்hக கவலை கொள்ள வேண்டும் என்று கேட்கிறார். வன்ஷை தூங்கும் படி ரிதிமா கேட்கிறார். வன்ஷ் ரிதிமாவை பார்க்க உங்களை எது கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கிறது என்று என் கூட பேசலாமே என்று சொல்ல ஒண்ணுமில்லை என்று வன்ஷ் சொல்கிறார். அதற்கு ரிதிமா சரி நீங்கள் கவலையாக இருப்பதை எனக்கு பார்க்கமுடியவில்லை அதை இப்போதே சரி செய்கிறேன் என்று சொல்ல அதற்கு வன்ஷ் நீ தான் என்னுடைய இதய சிகிச்சை நிபுணராச்சே உனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று சொல்கிறார். ரிதிமா வன்ஷிற்கு தலையை அமுக்கி மசாஜ் செய்ய வன்ஷ் சியா கூறிய வார்த்தைகளை நினைத்துப்பார்த்தபடி தூங்குகிறார். 

மறுநாள் காலை பாட்டிம்மா இஷாணிக்கு ஆராத்தி காட்டி வாழ்த்துகிறார். வீட்டிலுள்ள அனைவரும் இஷாணிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுகிறார்கள். வன்ஷ் வைர நெக்லஸ் பரிசளிக்கிறார் இஷாணி மகிழ்ச்சியுடன் கட்டியணைக்கிறார். கபீர் ரிதிமாவை பார்க்கிறார். வன்ஷ் நாங்கள் இன்று இஷாணி பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று சொல்ல சியா நாங்கள் குடும்ப படங்கள் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார். இஷாணி இன்றைய பார்ட்டி கலர் வெள்ளை என்று சொல்கிறார். வன்ஷிம் ஆமோதிக்கிறார். கபீர் அழகான பார்ட்டி உடை ஒன்று எடுத்து வைத்து பார்க்கிறார். அதை ரிதிமாவின் போட்டோ கட்டவுட்டிற்கு அணிந்து பார்க்கிறார். இந்த உடையில் உன்னை பார்ட்டியில் பார்க்கும் போது நான் எவ்வாறு மகிழ்ச்சியடைவேன் என்று யோசித்தபடி அதை பார்சல் செய்கிறார். 

இஷாணி பார்ட்டிக்கு போட வேண்டிய உடைகளை எடுத்துக்கொண்டு வன்ஷின் அறைக்கு செல்கிறாள். அங்கு வன்ஷ் இல்லை ஒருவேளை குளியலறையில் இருக்கலாம் என்று நினைத்து உடைகளை கதிரையில் வைத்துவிட்டு கண்டிப்பாக இதை பார்த்தால் வன்ஷ்க்கு தெரியும் என்று நினைத்தபடி செல்கிறார். கபீர் ரிதிமாவிற்காக தான் எடுத்த உடையை ரிதிமாவின் அறையில் வைக்கிறார். ரிதிமா குளியலறையிலிருந்து வந்து துவாயை தூக்கிப் போடுகிறார் அது இஷாணி வன்ஷிற்கு பரிசளிக்க வைத்த உடைகளின் மேல் விழுகிறது. கபீர் ஸ்கிறீனிற்குள் மறைந்து கொள்கிறார். ரிதிமா வந்து சட்டையை பார்க்கிறார் நீங்கள் என்னுடைய மனசை புரிந்து எதையும் தெரிவு செய்வதால் தான் நான் உங்களை மிகவும் காதலிக்கிறேன் என்று கூறி சட்டையை எடுத்து அணைத்தபடி இன்று நான் இந்த உடையை இரவு பார்ட்டிக்கு அணிய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று சொல்கிறாள். மறைந்திருந்த கபீர் பறவாயில்லையே உன்னுடைய விருப்பம் எனக்கு தெரிந்துள்ளது கூடிய விரைவில் நீ என்னுடைய அணைப்பிற்குள் வந்து விடுவாய் என்று நினைக்கிறார். ரிதிமா உங்களுக்கும் நான் உடைகளை பரிசளிக்க வாங்கியுள்ளேன் வன்ஷ் என்று சொல்லியபடி அவள் வாங்கிய உடையையும் சேர்த்து கட்டிலில் வைக்கிறாள். கபீர் அங்கிருந்து செல்கிறார். ரிதிமா இந்த உடைகளை வன்ஷ் இரவு பார்ட்டிக்கு அணிய வேண்டும் என்று நினைத்தபடி செல்கிறார். 

வன்ஷ் யோசித்தபடி நிற்க ஆங்றி வந்து என்னாச்சு என்று கேட்கிறார். அதற்கு வன்ஷ் ஏhயபெ எப்போதுமே அமைதியாக இருக்கும் ஆள் இல்லை அவனுடைய அமைதிக்குப் பின்னால் ஏதாவது பெரிய திட்டம் இருக்கும். நான் அவனை ஏமாற்றியதாக நினைத்து என்னுடைய குடும்ப அங்கத்தவர்களை பழிவாங்க நினைக்கலாம். கண்டிப்பாக அவன் தன்னுடைய சுயரூபத்தை கூடிய விரைவில் காட்டுவான் அதனால் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துமாறு கூறுகிறார். தூரத்திலிருந்து ஒருவர் வன்ஷை குறிபார்க்கிறார். ஆங்றி எதற்கும் யோசிக்க வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்ல வன்ஷ் செல்கிறார். 

ரிதிமா மறுபடி குமட்டல் வருவது போன்று உணர்க்கிறாள். சியா நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா என்று ரிதிமாவை கேட்க அவள் எனக்கு வாந்தி வருவது போல இருக்கிறது என்று சொல்கிறாள். அதற்க சியா ஏதாவது நல்ல செய்தி இருக்கிறதா? நான் புளி அல்லது மாங்காய் கொடுக்கலாமா என்று கேட்க ரிதிமா அப்படியெல்லாம் ஏதுமில்லை கண்டபடி யோசிக்க வேண்டாம் என்று சொல்கிறார். பாட்டிம்மா சியாவை அழைக்க சியா ரிதிமாவை சீக்கிரம் உடைமாற்றி பார்ட்டிக்கு தயாராகும்படி கூறிவிட்டு செல்கிறார். ரிதிமாவும் செல்கிறார். வன்ஷ் அறைக்குள் வந்து பார்க்கிறார் உடைகள் இருக்கிறது ஆனால் அது ரிதிமா வைத்த உடைகள். ஆனால் வன்ஷ் இஷாணி வைத்ததாக நினைத்து இஷாணி என்றுமே இந்த நடைமுறைகளை மறக்க மாட்டாள் எனக்காக உடைகளை தயாரித்து வைத்திருக்கிறாள் என்று கூறியபடி உடைகளை பார்க்கிறார். பிங் கலர் நன்றாக இருக்கிறதே என்று கூறியபடி உடைமாற்ற தயாராக ரிதிமா வந்து வன்ஷை கட்டியணைக்கிறார். 

உங்களுக்கு கண்டிப்பாக என்னுடைய உதவி தேவைப்படும் என்று கூறியபடி வன்ஷின் சேர்ட்டை கழற்றி மாற்றுவதற்கு உதவி புரிகிறார். ரிதிமாவை பார்த்து நீ ரொம்பவே அழகாக இருக்கிறாய் என்று சொல்ல அதற்கு ரிதிமா உலகிலேயே மிகவும் கம்பீரமான அழகான ஒருவர் என்னுடைய கணவராக இருக்கிறார் அது தான் என்று சொல்ல இருவரும் காதலுடன் ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். அனைவரும் பார்ட்டிக்கு வந்திருந்தார்கள் பாட்டிம்மா சியாவிடம் வன்ஷ் மற்றும் ரிதிமா எங்கே என்று கேட்க அவர்கள் இருவரும் வருகிறார்கள். வன்ஷை பார்த்து இஷாணி அதிர்ச்சியடைகிறாள். கபீர் தன்னுடைய உடைகளை ரிதிமா அவளுக்கே தெரியாமல் அணிந்திருக்கிறாள் பார்க்க ரொம்பவே அழகாக இருக்கிறாள் என்று நினைக்கிறாள். இஷாணி எதற்காக வன்ஷ் என்னுடைய உடைகளை அணியவில்லை என்று நினைக்கிறாள். ரிதிமா கபீரை கடந்து செல்கிறாள். 

வன்ஷ் இஷாணியை பார்த்து என்றுமே நீ மகிழ்வாக இருக்க வேண்டும் உன்னுடைய சிரிப்பு என்றுமே எனக்கு முக்கியமானது என்று வாழ்த்துகிறார். ரிதிமாவும் இஷாணியை வாழ்த்துகிறார். இஷாணி வன்ஷ் அணிந்திருக்கும் உடைகளை பற்றி ரிதிமாவிடம் கேட்க அது தான் வன்ஷிற்கு பரிசளித்த உடைகள் அழகாக இருக்கு தானே என்று கேட்டபடி செல்கிறாள். ஆரியன் இஷாணியை பார்த்து வன்ஷ் எப்போதுமே நீ உருவாக்கிய உடைகளை தானே அணிவார் இன்று என்னாச்சு என்று கேட்கிறார். அதற்கு இஷாணி உடை ஒரு விடயமே இல்லை காதல் தான் பெரிய விடயம் என்று கூற ஆரியன் ஆமா வன்ஷ் திருமணத்திற்கு பின்பு மாறிவிட்டார் அதற்கு இந்த நடைமுறையை மாற்றி யார் தன்னுடைய வாழ்வின் முக்கியமானவர் என்பதை உணர்த்திவிட்டார் இப்போ நாம் புரிந்து கொள்ள வேண்டியது வன்ஷின் வாழ்க்கையில் ரிதிமா தான் மிகவும் முக்கியமானவர் என்று சொல்கிறார். அதற்கு இஷாணி அப்படி இல்லை வன்ஷிற்கு எப்போதுமே நான் தான் முக்கியமானவள் அவர் என்னை மிகவும் நேசிக்கிறார் என்று சொல்ல அதற்கு ஆரியன் ரிதிமா ஒன்றும் அவருடைய முக்கியத்துவம் இல்லை ஏனென்றால் நீயா ரிதிமாவை என்ற நிலை வந்த போது அவர் உனக்கு மட்டும் தான் உதவி பண்ணினார் என்று கூற ரிதிமாவும் ஆமா அவர் என்னை தான் காப்பாற்றினார் என்று கூறுகிறார். கபீர் வந்து நானும் உனக்கு ஒரு சகோதரன் தான் உனக்கு எந்த ஆபத்தும் வர அனுமதிக்க மாட்டேன் வன்ஷ் போல் உன்னை பார்த்துக்கொள்வேன் என்று. சியா இஷாணியை கேக் வெட்டும் படி சொல்கிறாள். வன்ஷை குறிவைத்த அந்த நபர் சினப்பரில் விஷத்தை பயன்படுத்துகிறார். வன்ஷ் இஷாணிக்கு பூக்களாலான கிரீடத்தை அணிந்தபடி இப்போ தான் இளவரசி போல இருக்கிறாய் என்கிறார். கபீர் தனக்கு முன்னால் நிற்கும் ரிதிமாவை தொடுவதற்கு முயற்சி செய்கிறார். வன்ஷ் ரிதிமாவை அழைக்க அவரும் செல்கிறார். இஷாணி தனது விருப்பத்தை நினைத்தபடி கேக் வெட்டுகிறார். அந்த ஸ்னப்பர் வன்ஷை குறிவைக்கிறார். 

Update Credit to: Arunthathi Kanagaratnam (AK) Kanex Media

#Riddhima #VanshRaisinghania 
#Vansh #kabir #immj 
#immj2 #IshqMeinMarjawan2 
#IshqMeinmarjwan2
#helly 
#RrahulSudhir 
#vishalvashishtha 
#hellyshah 
#rrahul 
#riansh 
#IMMJ 
#IMMJ2

No comments:

Post a Comment