Friday, 5 February 2021

Ishq Mein Marjawan 2 - IMMJ2 Episode 185 Hindi Serial 5th February 2021 written update in Tamil





ரிதிமாவும் பாட்டிம்மாவும் வன்ஷை என்னாச்சு என்று கேட்டார்கள். அதற்கு வன்ஷ் இன்று கபீர் என்னை காப்பாற்றாவிட்டால் நான் உயிருடன் வீட்டுக்கு வந்திருக்க மாட்டேன் என்று சொல்ல கபீர் வன்ஷை காப்பாற்றியதை நினைத்துப்பார்க்கிறார். ஆங்றியும் ஆரியனும் வன்ஷை அழைத்துக்கொண்டு அறைக்க செல்ல வன்ஷ் ரிதிமாவிடம் கபீர் ரொம்பவே காயப்பட்டிருக்கிறார் அவருக்கு முதலுதவிப்பெட்டியை கொடுக்கும் படி சொல்கிறார். பாட்டிம்மா சியா கபீருக்கு நன்றி சொல்கிறார்கள். ரிதிமா கபீரிடம் வன்ஷ் உன்னுடைய எதிரியாச்சே எதற்காக காப்பாற்றினாய் என்று கேட்க நான் சொன்னால் நம்ப மாட்டாய் ஆனால் எனக்கும் மனிதாபிமானம் இருக்கிறது அது தான் காப்பாற்றினேன் என்று சொல்ல ரிதிமா கபீருக்கு நன்றி சொல்கிறார். நமக்கிடையில் எத்தனை கசப்பான அனுபவங்கள் நடந்திருந்தாலும் இந்த உதவியை தன் உயிர் இருக்கும் வரை மறக்க மாட்டேன் என்று கூறி சொல்கிறார். கபீரை கடந்து செல்கையில் கபீர் ரிதிமாவின் தலை முடிகளை தொட்டு பார்த்தபடி ரிதிமா கண்டிப்பாக நீ என்னிடம் திரும்பி வருவாய் என்று நினைத்தபடி சிரிக்கிறார். 

ரிதிமா அறைக்குள் சென்று வன்ஷை பார்க்கிறார் அவருடைய கால்களில் இரத்தம் வந்து கொண்டிருந்தது. எதற்காக உங்களுக்கு குண்டடி பட்டதை சொல்லவில்லை என்று கூறி வன்ஷ் எனக்கு இந்த புள்ளட்டை எடுக்கதெரியும் என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் என்று கூறி ரிதிமா டாக்டருக்கு போன் பண்ணுகிறார். வன்ஷ் போனை பறித்து டாக்டருக்கு போன் போட வேண்டாம் அவர் வந்தால் எப்படி குண்டடி பட்டது என்று கேட்பார் அதற்கு என்னிடம் பதில் இல்லை என்று சொல்லி ரிதிமாவை புள்ளட்டை எடுக்கும் படி சொல்கிறார். அதற்கு அவர் என்னால் எப்படி முடியும் என்று கேட்கிறார். 

வன்ஷ் ரிதிமாவிடம் கத்தரிக்கோலை கொடுத்து புள்ளட்டை எடுக்கும்படி சொல்கிறார். அதற்கு ரிதிமா இது டாக்டர் பார்க்கும் வேலை என்னால் முடியாது என்று சொல்ல அதற்கு வன்ஷ் ரிதிமாவை பேசி சம்மதிக்க வைக்கிறார். ரிதிமா புள்ளட்டை எடுக்கிறார். வன்ஷ் ரிதிமாவை அணைத்தபடி அவளின் கண்ணீரை துடைக்கிறார். 

கபீர் காயங்களுக்கு மருந்து போட்டபடி ரிதிமாவின் போட்டோ கட்டவுட்டை பார்த்து இப்படி நீயும் ஒரு நாள் எனக்கு மருந்து போடுவாய் என்று சொல்கிறார். எழுந்து சென்று லொக்கரில் இருந்த வைரங்களை எடுத்து பார்க்கிறார். எப்படி அற்த வைரங்களை வன்ஷிடமிருந்து எடுத்தார் என்பதை நினைத்து பார்க்கிறார். ரிதிமாவின் போட்டோவை பார்த்தபடி றான் வன்ஷை சாவிற்கு அழைத்துச்சென்று காப்பாற்றி கொண்டு வந்துள்ளேன். வன்ஷின் பிஸினஸ் நம்பிக்கையை உடைத்து குடும்பத்தின் நம்பிக்கையை பெற்றுவிட்டேன் இன்னும் சிறிது நாட்களில் ரிதிமா உன்னையும் அடைந்து விடுவேன் என்று சொல்லி அவளில் போட்டோ கட்டவுட்டை அணைக்கிறார். கூடிய சீக்கிரம் நீயும் என்னுடைய அணைப்புக்குள் நிஜமாகவே வந்து விடுவாய் என்று சொல்கிறார். 

இஷாணியின் அறைக்குள் ஒருவர் கத்தியுடன் செல்கிறார். திரும்பிப் பார்த்த இஷாணி அதிர்ச்சியடைகிறார். அங்கே ஆங்றி கேக் மற்றும் கத்தியுடன் நின்று இஷாணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்கிறார். நான் உன்னை சந்தோஷமாக வைத்திருப்பேன் என்று சத்தியம் பண்ணியிருக்கிறேன் இருந்தாலும் எங்களுடைய திருமணம் சந்தோஷமானதாக இல்லை என்று கூற அதற்கு இஷாணி அப்படியில்லை நான் மகிழ்வாக இருக்கிறேன் என்று சொல்கிறார். இஷாணி கேக் வெட்டி ஆங்றிக்கு ஊட்டுகிறாள் ஆங்கிறியும் இஷாணிக்கு ஊட்டுகிறார். பிறந்தநாள் உடையை பார்க்கிறார். 

வன்ஷ் எழுந்து பார்க்க ரிதிமா தூங்கிக்கொண்டிருக்கிறார். வன்ஷ் மெதுவாக எழுந்து வெளியே வந்து ஆங்றியுடன் பேசுகிறார். ரிதிமா நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்கிறார் ஆனால் நான் அந்த விபத்தில் சிக்கிய போது இதற்கு எதிராக நடந்திருக்கும் என்று நினைத்தேன் எனக்கு ஏதாவது ஆகினால் ரிதிமா உயிருடனே இருக்க மாட்டார் அந்தளவுக்கு அவர் என்னை நேசிக்கிறார் என்று சொல்கிறார். 

சியா அங்கு வந்து வன்ஷிடம் இதற்கு பெயர் பயமில்லை அக்கறை. ரிதிமா உங்களை மிகவும் நேசிக்கிறார் அங்கு நீங்கள் ஆபத்தில் இருந்த போது அவளுக்கு இங்கு உணர்வு பூர்வமாக உங்களின் ஆபத்து தெரிந்தது உங்களை சந்திக்க வேண்டும் என்று அடம்பிடித்துக்கொண்டு இருந்தாள் என்று சொல்கிறார். நீங்கள் இந்த பிஸினஸை கண்டிப்பாக நிறுத்தித்தான் ஆக வேண்டும். இப்போ நீங்கள் இரண்டு பேராக இருக்கிறீர்கள் எதிர்காலத்தில் மூவர் ஆகின்ற போது இது ஆபத்தானது என்று சொல்கிறார். அதற்கு வன்ஷ் அதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்கிறார். 

ரிதிமா எழுந்து பார்க்கிறார். அவரிற்கு குமட்டலாக இருக்கிறது. வன்ஷ் எங்கே என்று நினைக்கிறார். குளியலறைக்குள் சென்று வாந்தியெடுக்கிறார். 

வன்ஷ் அது நடக்காது அப்படி நடக்க நான் அனுமதிக்க மாட்டேன். ரிதிமா எந்தளவுக்கு என்னுடைய பலமாக இருக்கிறாரோ அந்தளவுக்கு அவர் தான் என்னுடைய பலவீனம் என்னால் இன்னொரு பலவீனத்தை என் வாழ்க்கையில் அனுமதிக்க முடியாது என்று சொல்கிறார். என்னுடைய குழந்தை என்றுமே இந்த வீட்டில் விளையாட முடியாது என்னால் பயத்துடன் என் குழந்தையை வளர்க்க முடியாது இந்த உலகத்தில் என்னுடைய குழந்தை என்ற பேச்சிற்கு இடமேயில்லை என்று சொல்கிறார். ரிதிமா குளியலறையிலிருந்து வெளியே வருகிறார்.

Update Credit to: Arunthathi Kanagaratnam (AK) Kanex Media

#Riddhima #VanshRaisinghania 
#Vansh #kabir #immj 
#immj2 #IshqMeinMarjawan2 
#IshqMeinmarjwan2
#helly 
#RrahulSudhir 
#vishalvashishtha 
#hellyshah 
#rrahul 
#riansh 
#IMMJ 
#IMMJ2

No comments:

Post a Comment