வன்ஷ் கபீரிடம் சொல்கிறார் அன்று என்ன நடந்ததோ அதெல்லாம் எதிர்பாராமல் நடந்தது அதற்காக நான் உன்னிடம் 1000 தடவை வேண்டும் என்றாலும் மன்னிப்பு கேட்க தயாரா இருக்கிறேன் என்று சொல்கிறார். வன்ஷ் இரண்டு கிளாசில் விஸ்க்கியை ஊற்றி ஒன்றை கபீரிடம் கொடுக்கிறார். அதை ஒரே தடவையில் குடித்துவிட்டு அந்த விபத்து தவறுதலாக நடந்ததா? உன்னோட அந்த தவறால என்னுடைய தந்தையுடனான இளமைக்காலத்தை நான் இழந்து விட்டேன் அதற்கு என்ன சொல்ல போகிறாய் என்று கேட்கிறார். அதற்கு வன்ஷ் இதற்காக நீ என்னை அழிக்க நினைக்கிறாய் அப்படி தானே என்று கேட்க அதற்கு கபீர் என்ன இருந்தாலும் நாம் ஒருவரை ஒருவர் வெறுக்கிறோம் என்று சொல்கிறார். கபீர் வன்ஷிடம் நீ எப்போது எனக்கு நன்றி சொல்ல போகிறாய் என்று கேட்க எதற்காக என்று வன்ஷ் கேட்கிறார். அதற்கு கபீர் பக்கத்திலிருந்த ரிதிமாவின் போட்டோவை காட்டி இதற்காக தான் நீ எனக்கு வாழ்க்கை பூராக கடமைப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு வன்ஷ் எனக்கு அந்த உண்மை முன்னாடியே தெரியும் முன்பு நீயும் ரிதிமாவும் எனக்கு பின்னாடி எதிராக இருந்தீர்கள். உன்னோட நல்லதுக்காக தான் நீ ரிதிமாவை பாவித்தாய் ஆனால் இன்று அவள் ரிதிமா வன்ஷ் ரெய்சிங்கானியா என்று சொல்கிறார். அதற்கு வன்ஷ் உன்னோட வாழ்க்கைல ரிதிமா வரவே நான் தான் காரணம் அவள் எனக்காக மட்டும் தான் உன்னை திருமணதம் செய்தாள் என்று சொல்கிறார். மேலும் எனக்கும் ரிதிமாவுக்குமிடையிலிருந்து மிகவும் இறுக்கமான உறவு அதனால் அவள் என்றுமே கபீரின் என்று சொல்லிக்கொண்டிருக்க வன்ஷ் இடைமறித்து அது முன்னாடி இப்போ அவள் தன்னுடைய கடந்தகாலத்தை முழுமையாக விட்டு வந்துவிட்டாள் என்று. நீ இப்போது பொறாமைப்படுகிறாய் ஏனென்றால் பெறுமதியான ஒன்றை நீ இழந்துவிட்டாய் என்று வன்ஷ் சொல்கிறார். மேலும் எனக்கு ரிதிமாவின் கடந்தகாலம் பற்றி எந்த கவலையும் இல்லை ஆனால் ஒன்று மட்டும் உண்மை இந்த உலகின் மிகவுமே அதிஷ்டமான ஆண் நான் தான் என்று கூறிவிட்டு வன்ஷ் செல்கிறார்.
மறுநாள் காலை வன்ஷ் அவருடைய பிஸினஸ் பாட்னர் சங் க்கு போன் போட்டு ரொம்ப கஷ்டப்பட்டு வைரங்களை எடுத்திருக்கிறேன். அதன் பெறுமதி என்ன என்று உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் என்று கூற அதற்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள் நாம் சந்திக்கலாம் என்று சொல்கிறார். ரிதிமா தூக்கத்திலிருந்து எழுந்து வன்ஷ் என்று அழைக்கிறார். அப்போது வன்ஷ் போனை கட் செய்து விட்டு ரிதிமாவை பார்த்து இப்போ எப்படி இருக்கிறது உன்னுடைய உடல்நிலை என்று கேட்க பறவாயில்லை என்று சொல்கிறாள். ரிதிமா வன்ஷிடம் யாரோடு பேசினீங்கள் என்று கேட்க அதற்கு வன்ஷ் அது என்னுடைய பிஸினஸ் சம்பந்தமான போன் அது தான் பேசினன் என்று சொல்ல அதற்கு ரிதிமா ஒகே என்று சொல்லிவிட்டு எழுந்திருக்க முயற்சிக்கிறார். வன்ஷ் தன்னுடைய கைகளை ரிதிமாவின் கால்களின் கீழ் தாங்கி பிடித்துக்கொண்டு நீ இப்போ காலை கீழே வைத்து நடக்க கூடாது என்று சொல்ல அதற்கு ரிதிமா அப்படியா எனக்கு இறக்கைகள் ஏதும் இல்லை பறந்து செல்ல கண்டிப்பா நடந்து தான் செல்ல வேண்டும் என்று சொல்ல அதற்கு வன்ஷ் அது தான் நான் இருக்கிறேனே அப்புறம் என்ன என்று கூறி அவளை தூக்கிக்கொண்டு சாப்பாட்டு மேசையருகே செல்கிறார்.
கபீர் சாப்பாட்டு மேசையிலிருந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார். ரிதிமா மற்றும் வன்ஷ் அன்பாக பேசி ஒருவருக்கொருவர் மாறி மாறி உணவூட்டிக்கொhண்டு இருந்தார்கள். கபீர் மிகவும் கோவமாகவும் பொறாமையாகவும் அவர்களை பார்த்தபடி இருக்கிறார். வன்ஷ் ரிதிமாவிடம் நீ இல்லாமல் என்னுடைய வாழ்க்கையே முழுமையடையாது. உண்மையான காதல் ஒருவருடைய வாழ்க்கையை எப்படி மாற்றிவிடுகிறது என்பதை நீ எனக்கு புரிய வைத்திருக்கிறாய் என்று சொல்கிறார். கபீருக்கு கோவம் அதிகமாகிறது அந்த இடத்தை விட்டு எழுந்து சென்று விடுகிறார். வன்ஷ் ரிதிமாவிடம் நீ எனக்கு மிகவும் விஷேஷமானவள் என்று சொல்கிறார்.
வன்ஷ் ஹாலில் போன் பேசிக்கொண்டு நிற்க கபீர் லைட் ஷேடை கழற்றி விட முயற்சிக்கிறார் அந்த நேரத்தில் இஷாணி அங்கு வந்து வன்ஷின் கைகளில் றாக்கி கட்டுகிறார். அதற்கு வன்ஷ் இன்று தான் ரக்ஷபந்தன் இல்லையே எதற்காக றாக்கி என்று கேட்க எனக்கும் தெரியும் இன்று ரக்ஷபந்தன் இல்லை என்பது இருந்தாலும் என்னுடைய அண்ணன் மிகவும் அன்பாகவும் பாதுகாப்பானவராகவும் இருக்கும் போது அவருக்கு ஏதாவது பரிசளிக்க மனது விரும்புகிறது என்று சொல்கிறாள். அன்று நான் ரிதிமாவின் பெத்தவங்களை தவறுதலாக விபத்துக்குள்ளாக்கி அவர்கள் இறந்த போது அன்று நீங்க தான் என்னை காப்பாற்றினீர்கள். அன்று என்னை காப்பாற்றியது மட்டுமில்லாமல் எனக்காக தண்டனையையும் அனுபவித்து இருக்கிறீங்க. அன்று கூறிய வாக்கை இன்று மட்டும் காப்பாற்றி உண்மையை மறைத்து என்னை காப்பாற்றி வருகீர்கள் என்று சொல்ல அதை அறைவிலிருந்து கேட்ட கபீர் அதிர்ச்சியடைகிறார். மேலும் இஷாணி சொல்கிறார் அந்த விபத்தில் இறந்தது ரிதிமாவின் பெத்தவங்க இல்லை கபீருடைய தந்தை என்று கூறி ரிதிமாவின் சந்தேகத்தை தெளியவைத்து என்னையும் காப்பாற்றி விட்டீர்கள் என்று சொல்கிறாள். அதற்கு வன்ஷ் அமைதியாக இரு இதை பற்றி இனிமேல் பேச மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய் என்று சொல்கிறார். நான் என்ன செய்தேனே அது உனக்காகவும் ரிதிமாவுடனான என்னுடைய வாழ்க்கையை காப்பாற்றுவதற்hகவும் தான் செய்தேன் என்று சொல்கிறார். நான் இதைப்பற்றி இனிமேல் பேச மாட்டேன் என்று வன்ஷிடம் சத்தியம் செய்கிறார். கபீர் நினைக்கிறார் என்ன ஒரு பாரிய பொய் வன்ஷ் என்னையே முட்டாளாக்கிவிட்டான் என்று. எப்படி வன்ஷ் இப்படி ஒரு விளையாட்டை என்னுடன் விளையாடலாம் அவனுடைய சாவை பார்க்காமல் என்னாய் ஓய்வெடுக்க முடியாது என்று கபீர் நினைக்கிறார். கபீர் லைட் ஷேடை கழற்றி விடுகிறார். வன்ஷ் இஷாணியை கட்டியணைத்தபடி நிற்கிறார். வன்ஷ் மேலிருந்து வந்த நிழலைக் கண்டு இஷாணியை தள்ளி விடுகிறார். ரிதிமா வந்து வன்ஷை தள்ளிவிட்டு அலறுகிறாள். லைட் ஷேட் ரிதிமா மேலே விழ வர இஷாணி சென்று லைட்ஷேட் கயிற்றை பிடித்து ரிதிமாவை காப்பாற்றுகிறாள். குடும்பத்திலுள்ள அனைவரும் ஷாலுக்கு வருகிறார்கள். பாட்டிம்மா என்னாச்சு என்று கேட்க ரிதிமா நான் அறையிலிருந்து வெளியே வந்த போது லைட் ஷேட் மேலிருந்து கீழே விழ வந்து கொண்டிருந்தது என்று சொல்லியபடி வன்ஷை சென்று கட்டியணைக்கிறாள். யார் இப்படிப் பண்ணியது என்று வன்ஷ் கேட்க ஆரியன் கபீரை பார்த்தபடி இது முன்னாடியே சற்று தளர்வாக இருந்தது நான் முன்பே இதை செய்யும் படி கூறி விட்டேன் இப்போதே பாத்துக்கொள்றேன் என்று சொல்கிறான். அதற்கு வன்ஷ் எதற்காக இதை என்னிடம் சொல்லவில்லை இன்றே இதை சரி செய்யும் படி கூறிவிட்டு றிதிமாவை தூக்கிக் கொண்டு அறைக்கு செல்கிறார். வன்ஷ் உன்னுடைய கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது என்று கபீர் தனக்குள் சொல்லிக் கொள்கிறார்.
இரவு வன்ஷ் கிற்றாருடன் வெளியிலிருந்து வருகிறார் கபீர் வன்ஷை தடுத்து எப்போதுமே கையில் துவக்கு வைத்திருக்கும் ஒருவர் கிற்றாருடன் வருவது வித்தியாசமாக இருக்கிறதே என்று சொல்கிறார். நான் பொலிஸ் ஆபிசர் சந்தேகமாக உள்ளது இதற்குள் என்ன இருக்கு என்று அறிய வேண்டும் என்று சொல்ல அதற்கு வன்ஷ் இது என்னுடைய வீடு சேச் வறன்ட் தேவையில்லை என்று. வன்ஷ் மூடியை திறந்து காட்டுகிறார் உள்ளே கிற்றார் மட்டும் இருக்கிறது. வன்ஷ் அங்கிருந்து செல்கிறார் கபீர் நினைக்கிறார் வன்ஷின் கண்கள் ஏதோ மறைப்பது போல தெரிகிறதே என்னவாக இருக்கும் என்று.
ஆங்றி கிற்றாரை பார்த்து வன்ஷிடம் எதற்காக இந்த கிற்றார் என்று கேட்க வன்ஷ் கிற்றார் பெட்டிக்குள் மறைத்து வைத்திருக்கும் வைரங்களை காட்டுகிறார். ஆங்றி நல்ல ஐடியா என்று சொல்ல வன்ஷ் இது என்னுடைய வாழ்க்கையில் உழைத்த பாதி பணம். நாளை மிகவும் கடுமையான ஒரு டீலை முடிக்க வேண்டி இருக்கிறது என்று சொல்கிறார். நாளை ஒரு வேளை பொலிஸ் இது தெரிந்து வந்தால் பிரச்சினை ஆகிவிடும் கண்டிப்பாக அவர்கள் எம்மை சுட்டுவிடுவார்கள் என்று வன்ஷ் சொல்கிறார். ஆங்றி தானும் அவருடன் வருவதாக சொல்ல வன்ஷ் இல்லை நீ இங்கிருந்து வீட்டை பாதுகாப்பாக பாத்துக்கொள் நான் இதை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். ஒரு வேளை டீல் தோல்வியடைந்தால் நான் அழிந்துவிடுவேன் அல்லது இறந்தே விடுவேன் என்று சொல்கிறார்.
கபீர் ரிதிமா மற்றும் வன்ஷ் உடைய போட்டோவை பார்த்தபடி தானும் ரிதிமாவும் காதலித்த நாட்களையும் ரிதிமா வன்ஷீடன் மகிழ்வாக இருந்த தருணங்களையும் நினைத்து பார்க்கிறார். நான் ஒரு தடைவ ரிதிமாவை இழந்துவிட்டேன் ஆனால் இனியும் கண்டிப்பாக இழக்க மாட்டேன். அவள் என்னுடையவளாக இருந்தால் மறுபடியும் என்னுடையவளாகுவாள். வன்ஷ் என்னிடமிருந்து எல்லாவற்றையும் பறித்து விட்டான் கண்டிப்பாக அவனிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துகொள்வேன். ரிதிமா கண்டிப்பாக என்னிடம் திரும்பி வருவாள் என்று சொல்கிறார்.
Update Credit to: Arunthathi Kanagaratnam (AK) Kanex Media
#Riddhima #VanshRaisinghania
#Vansh #kabir #immj
#immj2 #IshqMeinMarjawan2
#IshqMeinmarjwan2
#helly
#RrahulSudhir
#vishalvashishtha
#hellyshah
#rrahul
#riansh
#IMMJ
#IMMJ2









No comments:
Post a Comment