Wednesday, 3 February 2021

Ishq Mein Marjawan 2 - IMMJ2 Episode 183 Hindi Serial 3rd February 2021 written update in Tamil






வன்ஷ் கிற்றாரை எடுத்து வந்து அலமாரியில் வைக்கிறார் அந்த நேரத்தில் ரிதிமா வந்து என்னாச்சு என்று கேட்கிறாள். அதற்கு வன்ஷ் அது என்னுடைய ஆபிஸ் சம்பந்தப்பட்டது என்று கூறியபடி நீ இன்னும் குளிக்கவில்லையா என்று கேட்க ரிதிமா அதற்கு எனக்கு தான் கால்கள் நடக்க முடியாதே என்று சொல்கிறாள். வன்ஷ் ரிதிமாவை தூக்கிக்கொண்டு குளியலறைக்கு செல்கிறார். ரிதிமா சிரித்தபடி இப்போ நான் போகலாமா என்று கேட்க அதற்கு வன்ஷ் நாம் எதற்கு வந்தோம் என்று நீ மறந்துவிட்டாய் என்று கூறி ஷவறை திறக்கிறார். இருவரும் தண்ணீரில் நனைகிறார். ஒருவரை ஒருவர் காதலுடன் பார்க்கிறார்கள். வன்ஷ் ரிதிமாவிற்கு முத்தமிட்டுவிட்டு அவள் நீராட உதவி புரிகிறார். இருவரும் குளியல் தொட்டியில் ஒருவர் மேல் ஒருவர் தண்ணீர் ஊற்றி விளையாடுகிறார்கள். வன்ஷ் ரிதிமாவை நெருங்குகிறார். இங்கு கபீர் ரிதிமாவின் போட்டோவை பார்த்து பேசிக்கொண்டு இருக்கிறார். என்னுடைய கவனம் உன்னை விட்டு விலகியிருக்கிறது அதற்கு காரணம் நீ இன்னொருவனுடையதாகியது இல்லை நீ எப்போதுமே என்னுடையவள் உன்னை நான் எப்படியாவது மறுபடி என்னிடம் எடுத்துக்கொள்வேன், நான் என்ன செய்ய போகிறேன் என்று நீ நினைத்து கூட பார்க்கமாட்டாய் என்று சொல்கிறார். மேலும் ரிதிமாவின் போட்டோவை பிடித்தபடி நம்பு நீ கண்டிப்பாக என்னை நேசிப்பாய் என்று கூறி போட்டோவிற்கு முத்தமிடுகிறார். இங்கு வன்ஷ் ரிதிமாவை முத்தமிடுகிறார். 

வன்ஷ் போன் பேசியபடி மேலிருந்து இறங்கி வந்து கொண்டிருக்கிறார். ஹாலில் பாட்டிம்மா மற்றும் சியா பேசிக்கொண்டிருக்கிறார்கள். வன்ஷ் பாட்டிம்மாவிடம் வந்து இன்று முக்கியமான வேலை செய்ய போகிறேன் என்று கூற பாட்டிம்மா சற்று சோகமாகிறார். அவரை பார்த்த வன்ஷ் உங்களுக்கு என் மேல் நம்பிக்கையில்லையா எதற்றகாக கவலைப்படுகிறீர்கள்? நான் எந்த ஒரு பிரச்சினையையும் சமாளித்துவிடுவேன் அதற்கு நீங்கள் பூஜை பண்ணி பொட்டு வைத்து அனுப்ப வேண்டும் என்று சொல்ல அதற்கு பாட்டிம்மா இதுவரை நான் பூஜை பண்ணி பொட்டு வைத்தது எல்லாம் சரி ஆனால் இப்போது உனக்கு திருமணம் ஆகிவிட்டது அதனால் அந்த உரிமை உன் மனைவி ரிதிமாக்கு தான் இருக்கிறது என்கிறார். சியா எனக்கு ரிதிமா எங்கு இருக்கிறாள் என்பது தெரியும் நானே அவரை இங்கே கூட்டிவருகிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். பாட்டிம்மா சொல்கிறார் இந்த வேலை எவ்வளவு ஆபத்தானது என்று எனக்கு தெரியும் உனக்காக நான் கடவுளிடம் வேண்டிக்கொள்வதாக கூறுகிறார். 

ரிதிமா ஆராத்தி காட்டிவிட்டு எடுத்துவிட்டு வைக்க அந்த ஆராத்தி அணைந்துவிடுகிறது. இது பெரிய அபசகுனம் ஆகிவிட்டதே என்று சொல்ல அந்த நேரத்தில் சியா அங்கு வந்து அது என்ன அபசகுனம் என்று கேட்கிறார். அதற்கு ரிதிமா ஆராத்தி அணைந்துவிட்டது என்று சொல்கிறார் அதை கேட்டு சியா இது பெரிய அபசகுனமாகிவிட்டதே ஏதோ பிரச்சினை வர போவதாக தோணுவதாக சொல்கிறார். பாட்டிம்மா வன்ஷிற்கு பொட்டு வைக்கும் படி கூறினார் இன்று அவருக்கு ஒரு முக்கியமான மீற்றிங் இருப்பதாக சொல்கிறாள். அதற்கு ரிதிமா எதுவுமே தப்பாக நடக்காது கடவுள் எப்பவுமே துணையாக இருப்பார் என்று சொல்லி மறுபடி ஆராத்தி எடுத்து வன்ஷ்க்கு எடுத்து செல்ல தயாராகிறாள். சியா ரிதிமாவிடம் வன்ஷ் சட்டை கோட்டில் பூ வைத்து அனுப்பும் படி சொல்ல ரிதிமாவும் சம்மதிக்கிறார். வன்ஷ் கதிரையில் அமர்ந்திருந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் ரிதிமா வந்து பார்த்துக்கொண்டிருக்க வன்ஷ் அவளை உள்ளே வரும்படி அழைக்கிறார். அதற்கு ரிதிமா நான் வந்தது எப்படி தெரியும் என்று கேட்க அதற்கு வன்ஷ் அது ஒரு விசேஷமான விடயம் என்ன என்று சொல் பார்க்கலாம் என்று சொல்ல ரிதிமா யோசிக்கிறாள். வன்ஷ் ரிதிமாவை நெருங்கி அது உன்னுடைய வாசைன என்று சொல்கிறார். ரிதிமா அப்படியா என்று கேட்க வன்ஷ் அவளை அணைக்கிறார். அந்த நேரத்தில் காலடிச்சத்தம் கேட்க வன்ஷ் ரிதிமாவை மறைவான இடத்திற்கு இழுத்து செல்கிறார். ஆரியன் அங்கு வந்து பார்க்கிறார் வன்ஷ் இங்கு இல்லையே ஒரு வேளை அறையில் இருக்கலாம் என்று கூறியபடி செல்கிறார். வன்ஷ் ரிதிமாவிடம் எங்களை யாராலும் பிரிக்க முடியாது என்று சொல்கிறார். ரிதிமா சியா கூறிய வார்த்தைகளை நினைக்கிறார். 

ரிதிமா வன்ஷிடம் எனக்காக எது வேணும் என்றாலும் செய்வீர்களா என்று கேட்க அதற்கு வன்ஷ் கண்டிப்பாக என்று சொல்ல, இன்று செல்ல போகும் மீற்றிங்கை தனக்காக ரத்து செய்யும்படி ரிதிமா கேட்கிறாள். வன்ஷ் விலகி செல்கிறார். அப்போது ரிதிமா இன்று எனக்கு நல்ல நாளாக தெரியவில்லை ஆராத்தி அணைந்து விட்டது அது நல்ல சகுனம் இல்லை அதனால் மீற்றிங்கை இன்னொரு நாளுக்கு தள்ளி வைக்கும் படி கேட்க வன்ஷ் ரிதிமைவை பேச விடாமல் அவளுடைய வாய்க்குள் இனிப்பை ஊட்டியபடி என் மனைவி எனக்கு திலகம் இட்டு அனுப்பினால் என்னுடைய கெட்ட நேரமெல்லாம் நல்ல நேரமாக மாறிவிடும் என்று சொல்ல ரிதிமா வாயிலிருக்கும் இனிப்பை எடுக்க முயற்சிக்க வன்ஷ் அதை தடுத்து அந்த இனிப்பை தன்னுடைய வாயால் கடித்து சாப்பிடுகிறார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்கிறார்கள். மறுபடி தான் கூறியவற்றை சிந்திக்கும்படி ரிதிமா கேட்டபடி பூவை வன்ஷின் கோட்டில் வைக்கிறார் அந்த நேரத்தில் வன்ஷ் உடைய கைகள் தட்டி ஆராத்தி தட்டிலிருந்த குங்குமம் தவறி கீழே விழுகிறது. அதற்கு வன்ஷ் இது தற்செயலாக நடந்த விடயம் எனக்கு மீற்றிங்கிற்கு இன்னும் அரைமணி நேரம் தான் இருக்கிறது என்று கூறி செல்கிறார். ரிதிமா கவலையுடன் எப்படி வன்ஷை தடுப்பது எனக்கு ஏதுமே சரியாக படவில்லை என்று சொல்லியபடி இருக்க இஷாணி அங்கு வந்து இது வன்ஷின் வாழ்க்கையில் நடக்கும் இயல்பான விடயம் எங்க இப்படியான பயங்களை கடந்து வந்துள்ளோம் என்று கூறிவிட்டு செல்கிறார். ரிதிமா வன்ஷை எப்படியாவது தடுக்கவேண்டும் என்று நினைத்தபடி செல்கிறார். அறையில் வன்ஷ் மீற்றிங் போக உடைமாற்றி ஆயத்தமாகியபடி இருக்க திடீரென லைட் எல்லாம் அணைகிறது. 

ரிதிமா அங்கே குட்டையான பாவாடை அணிந்து மிகவும் கவர்ச்சியாக வருகிறாள். சென்று அறைக்கதவை திறப்பால் பூட்டி வைத்துக்கொண்டு பாடலை இசைக்கவிட்டபடி நான் இன்று உங்களை வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று சொல்கிறாள். வன்ஷ் ரிதிமாவிடமிருந்து திறப்பை வாங்க முயற்சித்தபடி இது முக்கியமான மீற்றிங் இது வெற்றிகரமாக முடிந்துவிட்டால் நான் என்றுமே உன்னுடையவனாகி விடுவேன் என்று சொல்கிறார். அதற்கு ரிதிமா இல்லை நீங்க போக முடியாது என்று சொல்ல வன்ஷ் என்னால் தள்ளிவைக்க முடிந்தால் கண்டிப்பாக செய்வேன் ஆனால் இது நான் கண்டிப்பாக செல்ல வேண்டிய ஒரு டீல் என்று கூறி அவளிடம் திறப்பை கேட்கிறார். அதற்கு அவள் சரி நீங்க போக நினைத்தால் போங்க என்று கூறி அவருடன் இணைந்து நடனம் ஆடுகிறாள். இருவரும் நடனமாடியபடி இருக்கையில் வன்ஷ் ரிதிமாவை அணைத்தபடி சரிக்கிறார் அப்போது அவளிடமிருந்த திறப்பு கீழே விழ வன்ஷ் அதை எடுத்தபடி நாங்கள் மாலை மறுபடி சந்திப்போம் என்று கூறி அவளுக்கு உடை ஒன்றை பரிசளிக்கிறார். இதை அணிந்து தனக்காக காத்திருக்கும்படி சொல்கிறார். இன்றைய மாலைப்பொழுது எங்களுக்கானது அதை நான் தவறவிடமாட்டேன் என்று கூறி ரிதிமாவை முத்தமிட்டுகிறார். பத்திரமாக செல்லும்படி வன்ஷிடம் ரிதிமா சொல்கிறார். வன்ஷ் கதவை திறந்து கொண்டு வெளியே செல்கிறார். ரிதிமா கடவுளிடம் வன்ஷை பாதுகாக்கும்படி வேண்டிக்கொள்கிறார். 

Update Credit to: Arunthathi Kanagaratnam (AK) Kanex Media

#Riddhima #VanshRaisinghania 
#Vansh #kabir #immj 
#immj2 #IshqMeinMarjawan2 
#IshqMeinmarjwan2
#helly 
#RrahulSudhir 
#vishalvashishtha 
#hellyshah 
#rrahul 
#riansh 
#IMMJ 
#IMMJ2

No comments:

Post a Comment