Monday, 1 February 2021

Ishq Mein Marjawan 2 - IMMJ2 Episode 181 Hindi Serial 1st February 2021 written update in Tamil




வன்ஷ் சொல்கிறார் கபீர் கண்டிப்பாக கோவமாக இருப்பார் அவரை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று. மேலும் அந்த விபத்து உண்மையிலேயே கபீரின் தந்தையும் ஆன்டியும் இல்லாமல் ரிதிமாவின் தாய் தந்தையார் தான் என்பதும் அந்த விபத்தை செய்தது நீ என்பதிலும் யாருக்குமே சந்தேகம் இருக்காது என்கிறார். அப்போது இஷாணி வந்து ஐ லவ் யூ அண்ணா நீங்கள் எப்போதுமே என்னை சிப்பிக்குள் முத்து போல் பாதுகாத்து கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்கிறாள். அதற்கும் மேல் அந்த விபத்து என்னால் நடந்து அதில் கொல்லப்பட்டது ரிதிமாவின் பெற்றவங்கள் என்ற உண்மை எப்போதுமே தெரிய வராது என்று சத்தியம் செய்திருந்தீர்கள். அதை நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள் என்று கூறி வன்ஷை கட்டியணைக்கிறாள். எதற்காக கபீரின் தந்தையும் ஆன்டியும் தான் அந்த விபத்தில் இறந்ததாக கூறினீர்கள் யாராச்சும் வேறு ஒருவர் பெயரை சொல்லியிருக்கலாமே என்று வன்ஷிடம் இஷாணி கேட்கிறாள். (ப்ளாஷபக்) வன்ஷ் நினைக்கிறார் கபீரும் ஆரியனும் அந்த ஆபிஸரிடம் வாக்குமூலத்தை மாற்றி வாங்கியதை பற்றி பேசிக்கொண்டு இருந்தது. அதற்கு வன்ஷ் இஷாணியிடம் சொல்கிறார் இந்த குழப்பங்களுக்கு எல்லாமே கபீர் தான் காரணம் இதை முழுமையாக முற்றுபெற வைக்க நினைத்து தான் அவ்வாறு கூறினேன் என்று. மேலும் நான் என்னுடைய குடும்பம், காதல் மற்றும் என்னுடைய திருமண வாழ்க்கையை காப்பாற்றியுள்ளேன் என்று சொல்கிறார். இப்போது கபீரின் மனத்துக்குள் இந்த பிரச்சினை கொழுந்து விட்டு எரியும் என்றும் சொல்கிறார். 

கபீர் கோவமாக கோடரியை எடுத்து விறகுகளை வெட்டியபடி வன்ஷ் உன்னுடைய கடைசிக் காலம் நெருங்கிவிட்டது. நீ என்னுடைய வாழ்க்கையிலிருந்து நிறைய விடயங்களை பறித்து விட்டாய் உன்னால் தான் நான் என்னுடைய தந்தையின் அன்பை இழந்துவிட்டேன். இது என்னுடைய முறை உன்னிடமிருந்து உனக்கு பிடித்தவற்றை பறிக்கப்போகிறேன் என்று கோவமாக கத்துகிறார். வன்ஷ் உடைய படத்தை பார்த்துகொண்டு நாளை இந்த விறகில் உன் உயிரற்ற உடலை போட்டு என் கைகளாலேயே எரித்து இந்த படத்தை அஞ்சலிக்காக வைப்பேன் என்கிறார்.

வன்ஷ் ஆங்றியிடம் நான் ரிதிமாவை முட்டாளாக்க நினைக்கவில்லை அவள் ரொம்பவே அப்பாவி. நான் ரிதிமாவை நேசிக்குமளவிற்கு இஷாணியையும் நேசிக்கிறேன். அதுக்கும் மேல் நான் ரிதிமாவுடன் இருக்கும் என்னுடைய காதலை காப்பாற்ற வேண்டியிருக்கிறது அதனால் தான் இப்படியான ஒரு கதையை சொல்லியிருக்கிறேன் என்று சொல்கிறார். கபீர் கண்டிப்பாக பழிவாங்க நினைத்து ஏதாவது செய்ய நினைப்பார் அதனால் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று ஆங்றியிடம் சொல்கிறார். அதற்கு ஆங்றி நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் நான் கபீர் மேல் ஒரு கண் வைத்து கொள்கிறேன் என்று சொல்கிறார். வன்ஷ் செல்ல முயற்சிக்கையில் அவருடைய கை பட்டு ரிதிமாவின் போட்டோ கீழே விழுந்து உடைகிறது. அதை பார்த்ததும் ரிதிமா எங்கே என்று ஆங்றியிடம் கேட்க நான் அவரை பார்க்கவேயில்லை என்று அங்றி சொல்கிறார். வன்ஷ் நான் ரிதிமாவை தேடிப்பார்க்கிறேன் எனக்கு ஏதோ தவறான சகுனம் போல தென்படுகிறது ரிதிமா நன்றாக இருக்க வேண்டும் என்று கூறியபடி செல்கிறார். 


ரிதிமா கண்ணாடி போத்தல்களை உடைத்து சாமி படத்தின் முன்பு போடுகிறார். காதல் என்பது வணக்கத்திற்குரியது அப்படிப்பட்ட காதலையே சந்தேகப்பட்டுவிட்டேன் அதற்கான தண்டனையை நான் அனுபவித்தே ஆகணும் என்று நினைக்கிறார். முன்பு வன்ஷ் கூறிய வார்த்தைகளை ரிதிமா நினைத்துப் பார்க்கிறார். வன்ஷ் காதலுடன் அவளை கவனித்துக் கொண்டதை நினைத்துப் பார்க்கிறாள். வன்ஷ் நாம் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க நினைத்து இந்த மறுதிருமணத்தை ஒழுங்கு செய்திருக்க நான் அவரை குற்றவாளியாக நினைத்து விட்டேன். உண்மையில் காதல் மற்றும் தர்மத்தின் வழியில் நடக்காததால் நான் தான் குற்றவாளி அதனால் நான் கண்டிப்பாக தண்டனையை அடைய வேண்டும் என்று நினைத்தபடி உடைத்து போட்ட கண்ணாடி துகள்கள் மேல் நடக்க ஆரம்பிக்கிறாள். நான் வன்ஷை மிகவும் காயப்படுத்திவிட்டேன் கண்டிப்பாக நானும் அந்த காயத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து அழுதபடி நடக்கிறாள். பாட்டிம்மாவும் சியாவும் வந்து பார்க்கிறார்கள். ரிதிமாவை கண்ணாடி துகள்கள் மேல் நடக்க வேண்டாம் என்று தடுக்கிறார்கள். ரிதிமா எதையுமே கேட்காமல் நடந்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் வன்ஷ் வந்து ரிதிமாவை நிறுத்தும்படி கூறுகிறார். ரிதிமா நான் உங்களை மிகவும் காயப்படுத்திவிட்டேன் அதற்காக நானே எனக்கு தண்டனை கொடுக்கிறேன் என்று கூறி மறுத்துவிட்டு மேற்கொண்டு நடக்கிறார். வன்ஷ் தன்னுடைய சப்பாத்துக்களை கழற்றிவிட்டு ரிதிமா நடப்பதை நீ நிறுத்தாவிட்டால் கண்டிப்பாக நானும் இந்த கண்ணாடி துகள்கள் மேல் நடப்பேன் என்று கூறி கண்ணாடித் துகள்கள் மேல் கால்களை வைக்கிறார். நீ என்னுடைய மனைவி அதனால் இன்பம் துன்பம் எல்லாவற்றிலும் நானும் பங்கெடுக்க வேண்டும் அதனால் சேர்ந்தே தண்டனையை அனுபவிப்போம் என்று சொல்கிறார். அதற்கு ரிதிமா இல்லை என்று கூறியபடி வன்ஷிடம் வந்து அவரின் மேல் சாய்ந்து கொள்கிறாள். அப்போது வன்ஷ் நான் என்றும் உனக்காக இருப்பேன் என்று கூற ரிதிமா நீங்கள் ரொம்பவே பிடிவாதமானவர் என்று சொல்கிறார். அதற்கு வன்ஷ் உன்னளவுக்கு எனக்கு பிடிவாதம் இல்லை என்று சொல்கிறார். ரிதிமா மயக்கமடைகிறார். வன்ஷ் ரிதிமா என்று கத்தியபடி அவளை தூக்கிக்கொண்டு செல்கிறார். ரிதிமாவின் கால்களில் இரத்தம் அதிகமாக வருகிறது உடனடியாக அவளுக்கு முதலுதவி செய்யும் படி பாட்டிம்மா சொல்கிறார். வன்ஷ் ரிதிமாவை தூக்கியபடி அறைக்குள் செல்கிறார். அப்போது வழியில் கபீர் வன்ஷ் ரிதிமாவை தூக்கிக்கொண்டு வருவதை பார்த்து அவர்களை தடுக்கிறார். வன்ஷை பார்த்து முன்னொரு காலத்தில் ரிதிமாவை நான் இவ்வாறு அன்புடன் தூக்கியபடி இருந்தேன் அதை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று. அதற்கு வன்ஷ் இப்போது நான் என்னுடைய மனைவிக்கு சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது அப்புறமாக உன்னுடன் பேசுகிறேன் உன்னுடைய கேள்விகளுக்கு இப்போ என்னால் பதிலளிக்க முடியாது என்று கூறி செல்கிறார். 

வன்ஷ் ரிதிமாவை கட்டிலில் படுக்க வைத்து அவரின் கால்களில் குத்தியிருக்கும் கண்ணாடித்துண்டுகளை அகற்றுகிறார். ரிதிமா சுயநினைவுக்கு வருகிறார். உன்னுடைய கால்கள் ரொம்பவே காயப்பட்டிருக்கு என்று சொல்ல எதற்காக இப்படியெல்லாம் பண்ணுகிறீர்கள் என்று ரிதிமா வன்ஷிடம் கேட்கிறார். நான் உன்னுடைய கணவர் என்னை தவிர இதை உனக்கு யார் செய்வார்கள் என்று கூறி எதற்காக இப்படி உன்னை வருத்தியிருக்கிறாய் என்று கேட்க ரிதிமா நான் உங்களுக்கு நல்ல மனைவி இல்லை உங்களை மிகவும் காயப்படுத்திவிட்டேன் என கூறி மன்னிப்பு கேட்கிறார். வன்ஷ் ரிதிமாவை முத்தமிடுகிறார் ரிதிமா அழுதபடி இருக்க நம் காதலுக்காகவாவது சிரிக்கும் படி கேட்க ரிதிமா சிரிக்கிறார். வன்ஷ் ரிதிமாவை கட்டியணைக்கிறார். 

வன்ஷ் ரிதிமாவிற்கு முதலுதவி செய்துவிட்டு ரிதிமாவை ஓய்வெடுக்கும் படி கூறிவிட்டு செல்ல ரிதிமா வன்ஷ் உடைய கைகளை பற்றி அமர வைக்கிறார். வன்ஷ் கட்டிலில் அமர்ந்து இருக்கிறார். ரிதிமா தூங்கியதும் வன்ஷ் ரிதிமாவை முத்தமிட்டுவிட்டு செல்கிறார். 

கபீர் கோடரியை எடுத்துக்கொண்டு வந்து வன்ஷ் உடைய பியானோவை உடைக்க முற்படுகிறார். வன்ஷ் வந்து தடுக்கிறார். வன்ஷ் கபீரிடம் அந்த விபத்து எதிர்பாராமல் நடந்த ஒன்று நான் உன்னிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறார். மேலும் அந்த விபத்து நடந்த போது நான் 18 வயது நிரம்பாத சிறுவன் இருந்தும் அதற்கான தண்டனையை நான்அனுபவித்துவிட்டேன் அதனால் நீ என்னை புரிந்து கொள்வாய் என்று நினைப்பதாக சொல்கிறார். அப்போது கபீர் நினைக்கிறார் நீ என்னிடமிருந்து எல்லாவற்றையும் பறித்து விட்டாய் இது நீ உன்னுடையவற்றை இழக்க வேண்டிய நேரம் என்று.

Update by - Arunthathi Kanagaratnam (AK) Kanex Media


#Riddhima #VanshRaisinghania 
#Vansh #kabir #immj 
#immj2 #IshqMeinMarjawan2 
#IshqMeinmarjwan2
#helly 
#RrahulSudhir 
#vishalvashishtha 
#hellyshah 
#rrahul 
#riansh 
#IMMJ 
#IMMJ2

No comments:

Post a Comment