கபீர் ஸ்கிறீனில் வீடியோ பார்க்கிறார். (ப்ளாஷ்பக்) கபீர் வன்ஷ் போன் பேசிக்கொண்டிருந்த போது அவரது சட்டை கோட்டில் கமரா பொருத்துகிறார். கபீரால் வீடியோவை வைத்து வன்ஷின் திட்டங்கள் எதையுமே கண்டுகொள்ள முடியவில்லை. அதற்கு ஆரியன் வன்ஷ் உண்மையை சொல்ல போகிறார் என்று தோணுவதாக. அதற்கு கபீர் அதற்கு சாத்தியம் இல்லை அப்படி அவர் உண்மையை சொல்வாராயின் அவரது முகத்தில் இத்தனை சிரிப்பு இருக்காது என்று. என்ன தான் வன்ஷ் கூறினாலும் அதற்கு தான் பதிலளிக்க போவதாக கபீர் சொல்கிறார்.
பார்ட்டி ஆரம்பமாகிறது. அனைவரும் வன்ஷ் மற்றும் ரிதிமாவை வரவேற்கிறார்கள். அவருகள் அமர இஷாணி மற்றும் ஆங்றி நடனம் ஆடுகிறார்கள். அவர்களிற்கு பின்பு ஆரியன் நடனமாடுகிறார். ஆரியன் பாட்டிம்மாவையும் சேர்த்து நடனமாடுகிறார். சியா நடனம் ஆடுகிறார் அவளை தொடந்து குடும்பமாக இணைந்து அனைவரும் நடனம் ஆடுகிறார்கள். ரிதிமா வன்ஷை பார்க்கிறார் வன்ஷ் சாதாரணமாக இருக்கிறார் ஆதலால் எல்லா குழப்பங்களும் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறார்.
வன்ஷ் கழுந்து நிற்கிறார். லைட் எல்லாம் திடீரென நிறுத்தப்படுகிறது. கபீர் சற்று பொறுங்கள் என்னுடைய விசேஷமான நடனம் வன்ஷ் மற்றும் ரிதிமாவுக்காக காத்திருக்கிறது என்று கூறி நடனமாடுகிறார். கபீர் வன்ஷை இழுத்து மேடையில் விட்டு அவரை சுற்றி நடனமாடுகிறார். கபீர் நினைக்கிறார் வன்ஷ் என்ன செய்கிறார் என்பதை நான் எந்நேரமும் பார்ப்பேன். நான் கமரா பொருத்தியதை வன்ஷ் அறிவதற்கு எந்த வழியும் இல்லை என்று. திடீரென வன்ஷ் காணமல் போகிறார். ரிதிமா வன்ஷை காணவில்லை என்று கவலையடைகிறார். வன்ஷ் போனில் யாருடனோ இங்கு எல்லாமே நோர்மலாக தான் இருக்கிறது. நாம் எல்லாம் எப்போது சந்திக்க வேண்டுமென்று நான் சொல்கிறேன் என்று பேசுகிறார். கபீர் வந்து வீடியோவை ஸ்கிறீனில் பார்க்கிறார். ஆனால் அதில் எதுவுமே இல்லை வெறுமையாக கருமையாக இருந்தது. கபீர் அதை பார்த்து கோவமடைகிறார். தன்னை தானே சமாதானப்படுத்திவிட்டு இதிலிருந்து நான் பின்வாங்க கூடாது என்று கூறியபடி வெளியே செல்கிறார். வீட்டு லொபியில் ஒரு மேசையில் வன்ஷின் கோட் இருப்பதை கபீர் பார்க்கிறார். (ப்ளாஷ்பாக்) வன்ஷ் கோட்டில் கமராவை பார்க்கிறார் அதனால் கோட்டை கழற்றி மேசை மேல் வைத்துவிட்டு செல்கிறார். கபீர் நினைக்கிறார் காரணம் எதுவாக இருந்தாலும் வெற்றி எனக்கு தான் என்று.
பார்ட்டி ஒருங்கமைப்பாளர்கள் ரிதிமா மற்றும் வன்ஷ் நடனமாட போவதாக அறிவிக்கிறார். வன்ஷ் கீழே பார்ட்டியில் இருக்கிறாரா என்று சொல்லி கொண்டு கபீர் கீழே வருகிறார். வன்ஷ் குற்றவுணர்வாக உணர்ந்தால் என்ன செய்வது என்று ரிதிமா நினைக்கிறார். தன்னுடைய எண்ணம் தவறாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். வன்ஷ் ரிதிமாவின் கைகளை பற்றி நடனம் ஆடுகிறார். அவர்களின் நடனம் முடிந்ததும் அனைவரும் கைதட்டி மகிழ்வடைகிறார்கள். பார்ட்டி ஒருங்கமைப்பாளர் இந்த இரவு இத்துடன் முடிவடைகிறது என்று சொல்ல வன்ஷ் மைக்கை வாங்கி இந்த இரவு இன்னும் முடியவில்லை அது அவ்வளவு வேகமாக முடியாது சில வாணவேடிக்கைகள் வெடிக்க வேண்டிய தருணம் என்று கூறுகிறார். பெரிய ஒரு நிகழ்வு நடைபெற உள்ளது என்று சொல்கிறார்.
வன்ஷ் மஞ்சள் நிற காகிதத்தை எடுத்து அனைவரிடமும் காட்டி இது என்ன கலர் என்று கேட்க அனைவரும் மஞ்சள் என்று சொல்கிறார்கள். அப்புறமாக அதை வெளிச்சத்திற்கு முன்னால் பிடித்து இப்போது இது ஆரஞ்சு நிறம் என்று சொல்கிறார். கலர் வெளிச்சத்திற்கு ஏற்ப மாறுபடும் அதே போல தான் எமது வாழ்க்கையிலும் சில நிகழ்வுகள் ஒவ்வொரு மனிதர்கள் முன்பும் ஒவ்வொரு கோணத்தில் தென்படும் ஆனால் உண்மையென்பது மட்டும் எப்பொழும் ஒன்றாகவே இருக்கும் என்று கூறி ஒரு வெள்ளை பேப்பரை கையிலெடுத்து அதை காட்டி இது போன்றது தான் உண்மை என்று சொல்கிறார். இந்த உண்மை சிலரது வாழ்க்கையில் புயலை கொண்டு வரும் அதாவது யார் இந்த உண்மையுடன் தொடர்புடையவர்களோ அவர்களுக்கு என்று சொல்கிறார். 1996 ல் நான் மிகவும் கோரமான ஒரு கார் விபத்தை சந்தித்தேன் அந்த விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டார்கள் அந்த நேரத்தில் எனக்கு வயது 15 இருற்தாலும் இது சட்டத்தின் முன்பு குற்றமாக இருந்தது என்று சொல்கிறார். ரிதிமா தடுமாறுகிறார் வன்ஷ் சொல்வது தன்னுடைய பெத்தவங்களை பற்றியா என்று நினைத்து. ஆனால் வன்ஷ் சொல்கிறார் அது ரிதிமாவின் பெத்தவங்கள் இல்லை என்று.
கபீர் என்ன என்று கேட்க வன்ஷ் சொல்கிறார் ஆமா கபீர் அது ரிதிமாவின் பெத்தவங்கள் இல்லை உன்னுடைய பெத்தவங்கள் என்று சொல்கிறார். அனைவரும் அதிர்ச்சியாக பார்க்கிறார்கள். தனக்கு தன்னுடைய தந்தையும் கபீரின் அம்மாவும் திருமணத்திற்கு பின்பும் தொடர்பில் இருந்தார்கள் என்பது தெரியாது அதே நேரத்தில் இறந்தது கபீரின் தந்தையும் அவரது ஆன்டியும் என்பதும் தெரியாது இதெல்லாம் தனக்கு பின்பு தான் தெரியவந்தது என்று சொல்கிறார். ஆனால் அவர்கள் இருவரும் அந்த இடத்திலேயே இறந்து விட்டார்கள் என்று சொல்கிறார். தான் பண்ணியது தெரியாமல் நடந்த ஒரு விபத்து அதற்கான தண்டனையையும் தான் சட்டபூர்வமாக அனுபவித்து விட்டாதாகவும் இதை புரிந்து கொண்டு கபீர் தன்னை மன்னிப்பார் என்று எண்ணுவதாக கூறுகிறார்.
கபீர் மிகவும் கோபத்துடன் பாய்ந்து சென்று வன்ஷை தள்ளுகிறார். வன்ஷ் கீழே விழ அனைவரும் பதற்றமடைந்து அவரை நெருங்க வர அனைவரையும் வன்ஷ் தடுக்கிறார். நீ என்னுடைய தந்தையை கொலை செய்து விட்டாய் உன்னை தண்டிக்காமல் விட மட்டேன் என்று கூறி கபீர் வன்ஷை தாக்குகிறார். வன்ஷீம் கபீரை பதிலுக்கு தாக்குகிறார். இறுதியில் இருவரும் பிஸ்டலை எடுத்து ஒருவருக்கு ஒருவர் குறி வைக்கிறார்கள். ரிதிமா பயத்துடன் இருக்கிறார். கபீருடைய துப்பாக்கியிலிருந்து புள்ளட் செல்கிறது அனைவரும் அதிர்ச்சியடைந்து நிற்கிறார்கள். ஆனால் அந்த புல்லட் வன்ஷை தாக்கவில்லை. வன்ஷ் அதிலிருந்து விலகி கொள்கிறார். ரிதிமா ஓடிச்சென்று வன்ஷை கட்டியணைக்கிறார். கபீரை பார்த்து உனக்கு என்ன தைரியம் என்று ரிதிமா கேட்க வன்ஷ் ரிதிமாவை தடுத்து கபீருடைய வேதனையையும் கோவத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். அத்துடன் கபீர் இது விபத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும் அது ஒரு விபத்து கொலை இல்லை அந்த விபத்திற்கான தண்டனையை நான்; ஏற்கனவே அனுபவித்து விட்டேன் என்று சொல்கிறார். வன்ஷ் புதிய திட்டத்தோடு வந்திருக்கிறார் சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று கபீர் நினைத்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து செல்கிறார். ரிதிமா மனதுக்குள் என்னுடைய காதல் மேல் சந்தேகப்ட்டு விட்டேன் இருந்தாலும் தன்னுடைய பயம் தீர்ந்து விட்டது என்று கடவுளுக்கு நன்றி சொல்கிறார்.
இஷாணி ரிதிமாவை பார்த்து இப்போ உன்னுடைய கேள்விகளுக்கு பதில் கிடைத்து விட்டது தானே உனக்கு வன்ஷ் மேல் என்றுமே நம்பிக்கை இல்லை யார் என்ன சொன்னாலும் அதை நம்பி வன்ஷ் மேல் சந்தேகம் கொள்வாய் என்று திட்டுகிறார். அதற்கு வன்ஷ் இஷாணியிடம் ரிதிமாவும் ஒரு மகள் தான் அவளுடைய இடத்தில் யார் இருந்தாலும் இதை தான் செய்திருப்பார்கள் இதில் ரிதிமா மேல் எந்த தவறும் இல்லை என்று சொல்கிறார். ரிதிமா வன்ஷை பார்த்து நினைக்கிறார் இத்தனை நடந்த பின்பும் வன்ஷ் எனக்காக தான் பேசுகிறார் என்று. வன்ஷ் தனக்கு சில வேலைகள் முடிக்க வேண்டியிருப்பாதாக கூறி செல்கிறார். அனைவரும் செல்கிறார்கள். ரிதிமா நினைக்கிறார் இது நான் செய்த சத்தியத்தை நிறைவேற்றும் நேரம் என்று.
Precap : ரிதிமா தன்னுடைய காதலை சந்தேகப்ட்டுவிட்டதற்கு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து அவர் உடைத்து போட்ட கண்ணாடித் துகள்கள் மேல் நடக்கிறார். வன்ஷ் வந்து அவரை தடுக்கிறார். ரிதிமாவை அறைக்கு அழைத்து சென்று முதலுதவி செய்கிறார். ரிதிமா மன்னிப்பு கேட்கிறார். வன்ஷ் அவரின் கன்னத்தில் முத்தமிடுகிறார்.
Update Credit to: Arunthathi Kanagaratnam (AK) Kanex Media
#Riddhima #VanshRaisinghania
#Vansh #kabir #immj
#immj2 #IshqMeinMarjawan2
#IshqMeinmarjwan2
#helly
#RrahulSudhir
#vishalvashishtha
#hellyshah
#rrahul
#riansh
#IMMJ
#IMMJ2






No comments:
Post a Comment