ரிதிமா சில போத்தல்களை உடைத்துக் கொண்டிருக்கிறார். இன்றைய நாள் வன்ஷ் அப்பாவி என்று தெரிய வந்தால் என்னுடைய காதலை சந்தேகப்பட்ட காரணத்திற்காக இந்த உடைந்த கண்ணாடி போத்தலின் துகள்களின் மேல் நடந்து எனக்கு நானே தண்டனையை கொடுத்துக்கொள்வேன் என்று நினைக்கிறாள்.
கபீர் அம்பில் நெருப்பை மூட்டி வன்ஷ் மற்றும் ரிதிமாவின் படத்திற்கு எய்கிறார். படம் பற்றி எரிகிறது. ஆரியன் சிரிக்கிறார். நான் பொய்யான ஆதாரங்களை கொடுத்திருக்கும் நேரத்தில் வன்ஷ் இன்று உண்மையை சொல்ல போகிறார். அப்படி என்னதான் உண்மையை வெளிக்கொண்டு வர போறாரோ தெரியல என்று சொல்கிறார். அப்போது ஒரு நிழல் தெரிகிறது. ஆரியன் கபீரை தடுக்கிறார். இருவரும் சேர்ந்து பார்க்கிறார்கள். அங்கு யாருமே இல்லை. ஒரு வேளை யாராச்சும் வேலைக்காரர்கள் சென்றிருக்கலாம் என்று கபீர் சொல்கிறார். எப்படியாவது வன்ஷ் மற்றும் ரிதிமாவை பிரிக்க வேண்டும் இல்லையென்றால் எங்களுடைய முழு திட்டமும் தோல்வியடைந்து விடும் என்று கபீர் சொல்கிறார்.
ரிதிமா அறைக்குள் வருகிறார். அங்கு வன்ஷ் இருக்கிறார். ரிதிமா பார்ட்டிக்கு கட்டபோகும் சேலையை காட்டுகிறார். வன்ஷ் கத்தரிக்கோலை எடுத்து வந்து சேலையை வெட்டும் படி சொல்கிறார். அதற்கு ரிதிமா இது நான் இன்று கட்ட வேண்டிய சேலை என்று சொல்ல வன்ஷ் இது நீ கட்டபோவது இல்லை நான் கூறியது போல இதை வெட்ட சொல்கிறார்.
ரிதிமா சேலையை வெட்டுகிறார். வன்ஷ் ரிதிமாவை பின்னால் திரும்பிப் பார்க்க சொல்ல ரிதிமாவும் பார்க்கிறார். அங்கே ஒரு திரை இருக்கிறது. அதை விலக்கும் படி சொல்ல ரிதிமாவும் விலக்குகிறார். அங்கு சேலை ஒன்று இருக்கிறது. இன்றைய பார்ட்டி தீம் இது தான் உனக்கு இது ரொம்பவே நன்றாக இருக்கும். அதனால் இதையே கட்டும் படி சொல்கிறார். அதற்கு ரிதிமா உங்களுடைய தெரிவு என்றுமே தவறாகாது என்று சொல்லிவிட்டு சென்று வன்ஷை கட்டியணைக்கிறார். வன்ஷை கட்டியணைத்தபடி எனக்கு இன்றைய இரவின் தீர்ப்பை நினைக்க பயமாக உள்ளது என்று சொல்கிறாள். அதற்கு வன்ஷ் நீ எதற்காக பயப்படுகிறாய் நீ தானே இன்றைய தீர்ப்பின் நீதிபதி. நூன் தான் குற்றவாளி எனவே நான்தான் பயப்பட வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு ரிதிமா நான் என் வாழ்க்கையில் நிறையவே இழந்து விட்டேன் உங்களை இழந்து விடக் கூடாது என்று சொல்கிறாள். அதற்கு வன்ஷ் நான் இதுவரை எதை நினைத்தும் பயந்தது இல்லை ஆனால் இன்று உன்னை விடடு தூர சென்று விடுவேனா என்று பயமாக உள்ளது என்று சொல்கிறார். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை நீ நன்றாக இருக்க வேண்டும் அதனால் உண்மையை சொல்ல போகிறேன். பின்பு நீயே தீர்மானித்துக்கொள் நான் தண்டிக்கப்பட வேண்டியவனா என்று. நான் உன்னுடைய முடிவான தீர்ப்பு எதுவென்றாலும் ஏற்றுக் கொள்கிறேன் இன்று இந்த கதைக்கு ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு ரிதிமா எதுவுமே தவறாக நடக்க கூடாது எல்லாமே சீக்கிரமாக சரியாக வேண்டும் என்று சொல்கிறாள். அதற்கு வன்ஷ் இது எதுவுமே எங்களுடைய கைகளில் இல்லை இன்று எல்லாமே உண்மையாக நடைபெறும் என்று சொல்கிறார்.
வன்ஷ அறையிலிருந்து வெளியே வர கபீரும் வருகிறார். கபீர் வன்ஷை பார்த்து இன்று இரவு பெரிய சூறாவளி வர போவதாக அறிந்தேன் என்று சொல்ல அதற்கு வன்ஷ் அந்த புயலை நினைத்து நீ பயப்படுகிறாயா என்று கேட்கிறார். எதற்கும் கவனமாக இருந்து கொள் ஒரு வேளை அந்த புயல் உன்னை தூரமாக தூக்கி வீசி விடும் என்று சொல்கிறார். அதற்கு கபீர் என் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை பார்க்க பெருமையாக உள்ளது என்று கூறி நம்முடைய பகை புதிய பரிமாணத்தை எடுக்கும் அதாவது நாளை காலை சூரிய உதயத்தை நம்மில் ஒருவர் தான் பார்ப்போம் என்று நினைப்பதாக. அதற்கு வன்ஷ் நான் கண்டிப்பாக உனக்கு சத்தியம் செய்வேன் உன்னுடைய இறுதி இரவு மிகவும் சிறப்பாக இருக்கும் என்று. கபீர் சொல்கிறார் இன்று இரவு நீங்கள் பல உண்மைகளை சொல்ல போவதாக அறிந்தேன் என்று சொல்ல அதற்கு வன்ஷ் சில செய்திகள் வட்டம் போன்ற என்று கூற அதற்கு கபீர் எனக்கு நன்றாகவே தெரியும் நீங்கள் புதிய விளையாட்டுக்களை விளையாட ஆரம்பிப்பீர்கள் எனென்றால் உங்களுக்கு தான் உண்மை சொல்லும் வழக்கம் இல்லையே என்று. அதற்கு வன்ஷ் கபீரிடம் நீ இன்று இரவு வரைக்கும் அமைதியாக இரு அதுவே உனக்கு உண்மை பொய்களை தெரியவைக்கும் என்று. அதற்கு கபீர் இன்றைய இரவின் தீர்ப்பிற்காக காத்திருப்பதாக கூறி விட்டு செல்கிறார்.
பாட்டிம்மா பார்ட்டி செய்பவர்களிடம் கூறுகிறார் புதிய பாடல்களை போட வேண்டாம் மனதுக்கு மகிழ்ச்சி தரும் இடைக்கால பாடல்களை போடும் படி. அதற்கு சியா பாட்டிம்மா சொல்வது சரி இன்றைய இரவு பசுமையான இரவு என்று சொல்ல அதை இஷாணியும் ஆமோதிக்கிறார்.
வன்ஷ் தொலைபேசியில் பேசுகிறார் எல்லாமே எங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் எதுவுமே தவறாக செல்ல கூடாது என்று. அந்த நேரத்தில் யாரோ அங்கு வருகிறார்கள். வன்ஷ் திரும்பிப் பார்க்கிறார். யாருமே இல்லை. இது என்னுடைய பிரமையாக இருக்கலாம் என்று வன்ஷ் நினைக்கிறார்.
சியா ரிதிமாவையும் வன்ஷையும் ஆராத்தி எடுக்கும் படி சொல்ல பாட்டிம்மா அதற்கு முன்பாக புதுமண தம்பதிகள் இனிப்பாக ஏதாவது சமையல் செய்யட்டும் அதை படைத்து சாமிக்கு ஆராத்தி எடுக்கலாம் என்று சொல்கிறார். இன்று ரிதிமாவுக்கு வன்ஷ் உதவி செய்யட்டும் சமையலுக்கு என்று கூற வன்ஷ் அதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்கிறார். பாட்டிம்hவும் சியாவும் செல்கிறார்கள். வன்ஷ் ரிதிமா இருவரும் சேர்ந்து இனிப்பு செய்கிறார்கள். ரிதிமா சோர்வாக இருக்க இப்படியே இருந்தால் எப்போ இனிப்பு செய்வது கொஞ்சம் சிரிக்கலாமே என்று ரிதிமாவிடம் சொல்ல அவளுமி சிரிக்கிறாள்.
ரிதிமா பொருட்களை எடுக்க முடியாமல் தடுமாற வன்ஷ் அவளை தூக்கி பொருட்களை எடுக்க உதவி புரிகிறார். நீ என்னை நெருங்கும் போதெல்லாம் என்னுடைய மூச்சுக்காற்று நின்றுவிடுகிறது. உனக்கு தெரியாது நீ எந்தளவு என் வாழ்க்கையோடு இணைந்திருக்கிறாய் என்று வன்ஷ் சொல்கிறார். இருவரும் காதலுடன் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இனிப்பு செய்கிறார்கள் அப்போது சியாவும் பாட்டிம்மாவும் வருகிறார்கள். சியா இன்று இனிப்பு ரொம்பவே சுவையாக இருக்கும் போல் உள்ளதே என்று சொல்கிறார். ரிதிமா பாட்டிம்மாவை இனிப்பின் சுவையை பார்க்கும் படி சொல்ல பாட்டிம்மா முதலிலி சாமிக்கு படைத்து விட்டு சாப்பிடலாம் என்கிறார்.
இனிப்பை சாமிக்கு படைக்கிறார்கள். ரிதிமா இன்று தீர்ப்புக்குரிய இரவாக இருக்கிறது. நான் வன்ஷை மிகவும் உண்மையாக காதலிக்கிறேன். கண்டிப்பாக எங்களுடைய காதல் ஜெயிக்கணும் என்று கடவுளிடம் வேண்டுகிறாள். வன்ஷ் நினைக்கிறார் இன்று ரிதிமாவின் சந்தேகங்கள் எல்லாவற்றுக்கும் முடிவு கிடைக்க வேண்டும் எங்களுடைய காதல் தான் ஜெயிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார். பாட்டிம்மா இனிப்பை சுவைக்கிறார். நான் இப்படியொரு இனிப்பை இதுவரையில் சாப்பிட்டதே இல்லை என்று சொல்கிறார். அதற்கு சியா இது சாதாரண இனிப்பு இல்லை வன்ஷ் மற்றும் ரிதிமாவின் காதல் கலந்த இனிப்பு அதனால் தான் சுவை அதிகமாக உள்ளது என்று சொல்கிறார். வன்ஷ் மற்றும் ரிதிமாவை ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டிவிடும் படி சொல்ல இருவரும் மாறி மாறி ஊட்டுகிறார்கள். பாட்டிம்மா அவர்களிடம் விருந்தினர்கள் வரும் நேரமாகிறது சென்று சீக்கிரம் ரெடி ஆக சொல்கிறார். இருவரும் செல்கிறார்கள்.
வன்ஷ் மற்றும் ரிதிமா அறையில் நிக்கிறார்கள். வன்ஷ் முன்பு ரிதிமாவிற்கு சேலை கட்டி விட்டதை நினைக்கிறார். தானே ரிதிமாவை பார்டிக்கு தயார் செய்வதாக சொல்லி ரிதிமாவுக்கு சேலை கட்டி விடுகிறார். அவரிற்கு ஒவ்வொரு நகையாக போட்டு அழகு பார்க்கிறார். வன்ஷ் ரிதிமாவிடம் இந்த உலகத்திலேயே நீ தான் மிகவும் அழகான பெண் நான் ரொம்பவே நேசிப்பவளும் நீ தான். இன்று இரவு என்னுடைய இதயத்தை திறந்து உன்னுடன் பேச போகிறேன் நீயே முடிவை தீர்மானித்து கொள் என்று சொல்கிறார்.
Precap - பார்ட்டி நடைபெறுகிறது. அனைவரும் நடனம் ஆடுகிறார்கள். வன்ஷ் மைக்கை எடுத்து இன்று நான் என் வாழ்க்கையின் உண்மைகள் சிலவற்றை சொல்ல போகிறேன். அது சிலரின் வாழ்க்கையில் புயலை கொண்டு வரும் என்று சொல்கிறார்.
Update Credit to: Arunthathi Kanagaratnam (AK) Kanex Media
#Riddhima #VanshRaisinghania
#Vansh #kabir #immj
#immj2 #IshqMeinMarjawan2
#IshqMeinmarjwan2
#helly
#RrahulSudhir
#vishalvashishtha
#hellyshah
#rrahul
#riansh
#IMMJ
#IMMJ2








No comments:
Post a Comment