Thursday, 28 January 2021

Ishq Mein Marjawan 2 - IMMJ2 Episode 178 Hindi Serial 28th January 2021 written update in Tamil




கபீர் பைனோகூலர் மூலமாக வன்ஷ் மற்றும் ரிதிமாவை பார்த்து பறவாயில்லையே ரிதிமா நன்றாக தான் நடந்து கொள்கிறாள் இப்படியே வன்ஷை சுட்டால் நந்றாக இருக்குமே என்று நினைக்கிறார். ரிதிமா துப்பாக்கி முனையில் வன்ஷிடம் நீங்கள் ஏதாவது உண்மையை வேண்டும் என்றே மறைக்கிறீர்களா என்று கேட்க நான் எதையும் மறைக்கவில்லை என்னைப் பற்றி உனக்கு நன்றாகவே தெரியுமே என்று சொல்கிறார். ரிதிமா நிஜமாவா என்று கேட்க வன்ஷ் துவக்கு லோட் பண்ணி இருக்கு கவனமாக கையாளும் படி சொல்கிறார். அதற்கு ரிதிமா கடவுள் எங்களுடைய வாழ்க்கையை பார்த்துக் கொள்வார் நீங்கள் எதற்காக பயப்படுகிறீர்கள் என்று கேட்கிறாள். வன்ஷ் ரிதிமாவிடமிருந்து துப்பாக்கியை வாங்க முற்படுகையில் கால் தடுக்கி இருவரும் கட்டிலில் விழுகிறார்கள். வன்ஷ் ரிதிமாவை கட்டி அணைத்தபடி இது நம்பிக்கைக்குரிய இரவு தன் மேல் நம்பிக்கை வை நான் உன்னுடைய நம்பிக்கையை நான் உடைக்க விரும்பவில்லை அத்தோடு எந்த உண்மையையும் மறைக்கவில்லை என்று கூறி ரிதிமாவின் கன்னத்தில் முத்தமிடுகிறார். 

நான் உன்னை ரொம்பவே நேசிக்கிறேன் உன்னுடைய பேரில் பொய்யான சத்தியம் செய்யவில்லை என்று சொல்கிறார். இஷ்குமே மெரிஜாவான் பாடல் பின்னணியில் செல்ல ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருக்கிறார்கள். ருpதிமா அந்த இடத்தை விட்டு செல்கிறார். 

ரிதிமா வன்ஷை சுட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் மிஸ் ஆகிட்டே என்று கபீர் நினைத்தபடி நிற்க ஆரியன் அந்த இடத்திற்கு வந்து என்னாச்சு என்று கேட்க ரிதிமா வன்ஷை துப்பாக்கி முனையில் வைத்திருந்தார் ஒரு கொலை நடந்திருக்கணும் ஆனாலும் மிஸ் ஆச்சு என்று செல்கிறார். 

மறுநாள் காலை பாட்டிம்மா ரிதிமாவை சாமிக்கு ஆராத்தி காட்டும் படி சொல்ல ரிதிமா யாரை நம்புவது என்றே தெரியவில்லை என்று நினைத்தபடி ஆரார்த்தி காட்டுவகிறார். அப்போது வன்ஷ் வருகிறார் அவரை பார்த்ததும் முதல்நாள் ஆபிஸர் கூறிய வார்த்தைகளை ரிதிமா நினைக்கிறார். வன்ஷ் வந்து வன்ஷ் ஆராத்தி தனக்கும் தரும்படி கேட்க ரிதிமா விலகி செல்லும் படி சொல்கிறார். ஆனால் வன்ஷ் ஆராத்தி மேல் கைகளை வைத்தபடி பேசுகிறார். நீ; என்னோட வாழ்க்கை ரொம்பவே முக்கியமானவள் உனக்கு என்னிடமிருந்து என்ன வேணுமோ கேள் என்று சொல்கிறார். வன்ஷ் கைகளில் ஆராத்தி சுடர் சுடுகிறது. ரிதிமா ஆராத்தியை வைத்துவிட்டு வன்ஷை அழைத்துக் கொண்டு நீச்சல்தடாகத்திற்கு செல்கிறார். சொல்கிறார் 

ரிதிமா வன்ஷை நீச்சல்தடாகம் பக்கத்திற்கு அழைத்து சென்று அவருடைய கைகளை தண்ணீருக்குள் அழுக்கி ஆராத்தி சூடு பட்ட இடத்தை பார்க்கிறார். வன்ஷ் கைகள் காயப்பட்டிருந்தது. எனக்கு உங்க மேல எந்த சந்தேகமும் இல்லை ஏனென்றால் நீங்கள் எனக்காக ஒரு குடும்பத்தையும் வாழ்க்கையையும் கொடுத்து இருக்கிறீங்கள். இது நம்பிக்கை சம்பந்தப்பட்டது இல்லை வேறு விடயம் நீங்க தான் என்னுடைய பெத்தவங்களை கொலை பண்ணினீங்களா என்று ரிதிமா கேட்க யார் உன்னிடம் இப்படி கூறியது என்று வன்ஷ் கேக்கிறார். அதற்கு ரிதிமா அது இப்போ தேவையில்லை எனக்கு உண்மை தான் தேவை என்று சொல்கிறாள். நீங்கள் மௌனமாக இருப்பதை பார்த்தால் உங்களுக்கும் என்னோட பெத்தவங்களோட சாவுக்கும் சம்பந்தம் இருக்கு போல என்று கேட்டபடி தடுமாறி விழ போக வன்ஷ் தாங்கி பிடிக்க இருவரும் நீச்சல்தடாகத்துள் விழுகிறார்கள். நீங்க உங்களோட அம்மாவின் கொலையாளியை பிடிப்பதற்காக ராகினிய எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருந்தீர்கள். அவளை கடத்தி என்னால இறந்து போனாள் என்று தெரிஞ்சப்ப எவ்வளவு கோவப்பட்டிங்க. அது போல தானே எனக்கும் என்னுடைய பெத்தவங்களோட சாவுக்கான காரணத்தை அறிய இருக்கும் எதற்காக என்னுடைய வேதனையை புரிந்து கொள்ளாமல் இப்படி உண்மையை மறைக்கிறீர்கள் என்று கேட்கிறாள். அதற்கு வன்ஷ் எனக்கு நன்றாகவே தெரியும் உனக்கு உன்னுடைய பெத்தவங்க என்னை விடவும் எவ்வளவு முக்கியம் என்று சொல்கிறார். அதற்கு ரிதிமா எனக்கு இப்போ யார் முக்கியமானவர்கள் என்று தெரிவு செய்வதிலேயே குழப்பமாக உள்ளது என்று சொல்கிறாள். இப்போ எனக்கு தெரிய வேண்டியது நீங்க என்னோட பெத்தவங்களோட சாவுக்கு காரணமா இல்லையா என்பது தான். அப்படி நீங்கள் காரணம் இல்லை என்று சொன்னால் அதை எனக்கு ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் படி கேட்கிறாள். அப்படி நீங்கள் தவறு செய்யவில்லை என்று நிரூபிக்க தவறினால் நான் என்ன செய்வேன் என்று உங்களுக்கு தெரியுமா என்று கேட்க வன்ஷ் தெரியும் என்று சொல்கிறார். நான் என்னோட பெத்தவங்களோட உண்மையை கண்டு பிடிக்க கூடாது என்ற காரணத்துக்காக தானே நீங்க இந்த மறு திருமணம் என்ற சடங்கை ஆரம்பிச்சிங்க என்று ரிதிமா கேட்கிறார். 

ரிதிமா அந்த ஆபிஸர் கொடுத்த வாக்குமூல வீடியோவை வன்ஷிடம் காட்டுகிறார். அதைப் பார்த்த வன்ஷ் அதிர்ச்சியடைகிறார். இவற்றை பார்த்துக்கொண்டிருந்த கபீர் நல்லது ரிதிமா என்று சிரிக்கிறார். இது என்ன முட்டாள்தனமான வீடியோ யா இதை உன்னிடம் கொடுத்தது என்று வன்ஷ் கேட்க அது இப்போ முக்கியம் இல்லை என்று ரிதிமா சொல்கிறார். இவரை யாரோ துன்புறுத்தி இவ்வாறு கூற வைத்திருக்கிறார்கள் என்று வன்ஷ் சொல்ல இவரை துன்புறுத்தியது உங்களுக்கு எதிரான உண்மையை சொல்ல வைப்பதற்காக மட்டும் தான் என்று ரிதிமா சொல்கிறார். அப்போ நீ என்னை நம்பவில்லையா என்று வன்ஷ் ரிதிமாவிடம் கேட்கிறார். கபீர் ரிதிமாவை சூழ்ந்திருக்கும் மாய பிம்பத்தை அவ்வளவு எளிதில் வன்ஷால் விரட்ட முடியாது. இப்போது ரிதிமா வன்ஷ்க்கு எதிராக நிக்கிறாள் என்று நினைக்கிறார். 

ரிதிமா வன்ஷிடம் கேக்கிறாள் இப்போ சொல்லுங்க எதற்காக நீங்கள் 4 வருடங்கள்  சிறுவர் தடுப்பு மையத்தில் தங்கி இருந்தீங்க என்று. அதற்கு வன்ஷ் மௌனமாக நிக்க உங்கள் மௌனம் என்னுடைய பெத்தவங்க சாவுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருப்பது போல் சிந்திக்க வைக்கிறது என்று சொல்கிறாள். எனக்கு தெரிஞ்சாகணும் நான் அநாதையாக்கப்பட்டதுக்கு காரணம் என்னுடைய கணவர் தானா என்று சொல்லிவிட்டு தண்ணீருக்குள் இருந்து வெளியே வர கால் தடுக்கி விழ போக வன்ஷ் அவளை தாங்கி பிடிக்கிறார். சரி நான் எதற்காக சிறுவர் தடுப்பு மையம் போனேன் என்ற காரணத்தை இன்று எங்கள் திருமண விழாவில் சொல்கிறேன் அப்போ நீயே முடிவு பண்ணிக்கோ நான் குற்றவாளியா இல்லையா என்று கூறுகிறார். உன்னோட பெத்தவங்க சாவுக்கு நான் தான் காரணம் என்று நினைத்தால் நீ என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் இன்று நீ தான் நீதிபதி என்று வன்ஷ் கூறுகிறார். ஆதாரங்கள் எல்லாமே வன்ஷ{க்கு எதிராக இருந்தால் நான் என்ன செய்வது என்று ரிதிமா நினைக்கிறார்.

ரிதிமா பூமரங்களுக்கு தண்ணீர் ஊற்றியபடி வன்ஷ் இன்று இரவு பார்ட்டில எல்லா உண்மைகளையும் சொல்ல போறார். அதனால் எனக்குள் இருக்கும் மாயைகள் குழப்பங்கள் இல்லாமல் போகும். ஒரு வேளை வன்ஷ் என்னுடைய பெத்தவங்க சாவுக்கு காரணமாக இல்லாமல் இருந்தால் நான் வன்ஷ{க்கு உங்கள சந்தேக பட மாட்டன் என்று கூறிய சத்தியம் பொய்யாகிவிடும் என்று நினைக்கிறார். வன்ஷ் திருமண படத்தை பார்த்தபடி நிற்க சியா அங்கு வந்து என்ன ரிதிமாவை பற்றி நினைத்துகொண்டு இருக்கிறீர்களா என்று கேட்கிறாள். எனக்கு உங்களையும் ரிதிமாவையும் ரொம்பவே பிடிக்கும் ஆனால் இப்போ ரிதிமா ரொம்பவே வேதனையாக இருக்கிறா என்று சொல்ல  எதற்கும் கவலைப்பட வேண்டாம் ரிதிமாவின் சோகம் எல்லாம் இன்று இரவோடு முடிவுக்கு வந்துவிடும் என்று சொல்லி வன்ஷ் கண்ணாடி மேசை மேல் அடித்து கையை காயப்படுத்தி கொள்கிறார். இங்கு ரிதிமா முள் குத்தி காயமடைகிறார். இன்று கான் தான் நீதிபதி என்று வன்ஷ் கூறி விட்டார் ஒரு வேளை வன்ஷ் தான் என்னுடைய பெத்தவங்க சாவுக்கு காரணம் என்றால் நான் என்ன செய்வது? ஏன்ன முடிவு எடுப்பது என்று யோசிக்கிறார். இந்த விடயத்தில் யார் வெற்றி பெற்றாலும் தோல்வியடைய போவது நான் தான் என்று நினைக்கிறாள். இங்கு வன்ஷ் ரிதிமாவின் இதயம் சுக்குநூறாக உடைந்து விட்டது அதற்கு நானே காரணமாகிவிட்டேன் கண்டிப்பாக அவளின் இந்த வேதனையை நான் போக்க வேண்டும் என்று நினைக்கிறார். 

ரிதிமா கடவுள் என்னுடைய தலையில் என்ன எழுதி வைத்திருக்கிறார் என்று நான் அறிய வேண்டும் என்று அறிய நினைத்து நாணயத்தை எடுத்து சுண்டிப்பார்க்க நினைக்கிறார். இதில் தலை விழுந்தால் என்னுடைய மாயைகள் எல்லாம் விலகும் அதுவே என்னுடைய பெரிய தோல்வியாக இருக்கும் என்று நினைத்தபடி நாணயத்தை சுண்டி விடுகிறார். சியா உங்களுக்கும் ரிதிமாவுக்காவும் நான் கடவுளிடம் வேண்டிக்கொள்வதாக கூறுகிறார் அப்போ அங்றி வர சியா செல்கிறார்.

வன்ஷ் அங்றியிடம் அருகிலிருக்கும் சிவப்பு துணியை எடுக்குமாறு கூறுகிறார். அங்றி என்ன என்று கேட்டபடி துணியை எடுக்கிறார். அங்கே ஒரு குவளையில் சூடான எண்ணெய் இருக்கிறது. ரிதிமாவின் பார்வையில் நான் குற்றவாளியாக தெரியும் சந்தர்ப்பத்தில் இந்த எண்ணையை எடுத்து தன் மேல் ஊற்றும் படி அங்றியிடம் கூறுகிறார். 

இஷாணி ரிதிமா சுண்டிய நாணயத்தை கையில் எடுத்தபடி உன்னுடைய தலைவிதியை இந்த நாணயத்தால் தீர்மானிக்க முடியாது. நீ விதைத்ததை தான் நீ அறுவடை செய்ய வேண்டும் என்று சொல்கிறாள். இன்று நடைபெற இருப்பவற்றால் வன்ஷ{டைய கண்களில் கண்ணீர் வந்தால் நான் உன்னுடைய கண்களில் இரத்தம் வர வைப்பேன் உண்மையான காதலுக்காக ஒருத்தர் தண்டிக்கபடுவதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று இஷாணி ரிதிமாவிடம் கூறுகிறாள்.

அங்றி இது என்னால் முடியாது என்று வன்ஷிடம் சொல்கிறார். அதற்கு வன்ஷ் அங்றியிடம் நான் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்வேன் என்று நீ எனக்கு சத்தியம் பண்ணி இருக்கிறாய் என்று சொல்கிறார். என்ன இருந்தாலும் இது என்னால் முடியாது மன்னித்து விடுங்கள் என்று அங்றி சொல்லிவிட்டு இவ்வாறு தவறான ஒரு விடயம் நடக்க கூடாது என்று நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன் என்று சொல்கிறார். எல்லாமே இன்று ரிதிமா எடுக்கபோகும் முடிவில் தான் உள்ளது என்று வன்ஷ் சொல்கிறார். இன்றைய இரவின் இருள் பல புதிய கேள்விகளை உருவாக்கி விடுமா என்று ரிதிமா கவலைப்படுகிறார்


Kabir binoculars moolamaga Riddhima & Vansh ai parthu kondu irukirar. Paravai ila Riddhima nee nalla than move panukirai enru kabir thanakul solli kondu nee ipo vansh a shoot paninal rompa nalla irukum enru ninaikirar. Riddhima gun point la Vansh idam neenga unmai ethachum maraithu irukiringala enru ketka Vansh ila enru solkirar. unaku ennai nallave theriyum enru vansh solrar. Riddhima nijamava enru ketka Vansh solkirar Gun load pani iruku careful a handle pana soli. athatku Riddhima kadavul nam valkaiyai parthu kolvar ethatkaga neenga acham kolkireergal enru kekiral. Vansh Riddhimavidam irunthu Gun ai vanga try panukirar. antha neerathil iruvarum bed la viluranga. Vansh Riddhima vai anaithapadi ennai nampu enru solkirar. ithu nampikaikuriya iravu. intha nerathil nan unudaya nampikaiyai udaika virumpavillai. nan entha oru unmaiyayum maraikavillai enru solli Riddhimavai kannathil muthamidukirar. 

Vansh solkirar nan unai rompave virumpukiren unoda perila poiyana sathiyam seya matan enru solkirar. Ishq mein marjawan… songs pinnaniyil play aka iruvarum oruvarai oruvar partha padi irukirargal. Riddhima selkirar. Kabir Riddhima vansh ai shoot pani iruntha rompa interest aka intha scene irunthirukum enru ninaikirar. Antha nerathil aryan angu varukirar. enachu brother enru kekirar. athatku kabir ethuvum agala Riddhima gun point la Vansh irunthar, enna oru dead body vilunthiruka venum analum miss akitu enru solkirar. Ennidam oru periya plan iruku enru Kabir solkirar. 

Marunal Kaalai pattimma Riddhimavidam samiku arathi katum padi solkirar. Riddhima yarai nampuvathu enru theriyavillai enru ninaithapadi samiku arathi edukirar antha nerathil Vansh varukirar. Riddhima Vansh ai parthathum officer sonnathai ninaithu parkirar. Vansh Riddhimavidam arathiyai tharumpadi keka Riddhima Vansh idam vilagi sellum padi koorukirar. Vansh arathi mel kaikalai vaikrar. avarudaiya kaikalai arathu sudukirathu. Apothu Vansh Riddhimavidam sathiyama solran nee enoda life la rompa mukkiyamanaval unakaka ennidamirunthu enna therinchaganum enru kekirar. Riddhima Vansh ai pool side ku alaithu senru vansh udaya kaikalai thanneer ulle amukkukirar. Vansh udaiya kaikal nerupu patu kayam patirunthathu. Enaku unga mela entha santhegamum ilai. enaku theriyum neenga enagaga oru puthiya kudumpam matrum valkaiyai koduthu irukirergal ithu engaloda napikai samantha patathu ila ithu veru oru ulagam enru solkirar. unmaiya solunga neenga than enoda parents a kolai paniningala enru kekirar. Vansh ila yar ipadi kooriyathu enru kekirar. Riddhima marupadiyum neenga poi solringa enru kooriya padi thadumari vila poga Vansh Riddhimavai pidika iruvarum thavari pool ule vilukirargal. Riddhima marupadi pesukirar ungaloda amma va kolai paninavanga pathiya unmaiya arirathukaka neenga Ragini a pathukappaga vaithirunthinga. Nan Ragini a kadathiya pothu neenga evlo kovapattu thadumarininga. ipo nan enoda parents da killer pathi arirathu thavara enru kekirar. enakum athe alavuku vethanai irukum enakum enoda parents pathina unmaiya ariya vendiyathu evalavu mukkiyam enru therinthum neenga unmaiya maraikiringa enru kekirar. athatku Vansh enaku nanragave theriyum unaku unoda parents ennai vida mukkiyamanavargal enru solla Riddhima solkirar enaku ipo yar mukkiyam enru therivu seyvathil mugavum kulapamaga ullathu enru. ipo enaku theriya vendiyathu neenga than enoda parents dead ku karanamanavara ilaya enral athai niroopikka solkiral. ungalidam atharam ilavittal nan ena seyven enpathu ungaluke theriyum enru solla Vansh athu enaku theiryum enru solkirar. neenga ennai marupadi thirumanam seya ninaithathe nan enoda parents da unmaiya ariya koodathu enpathatkaga than. ipidi irukum pothu nan epadi unmaiyai arivathu enru kekirar. 

Riddhima antha officer kooriya vaakumoolam video vai vansh ku katukirar. vansh athirchiyadaikirar. Kabir ivatrai parthapadi well done Riddhima enru solkirar. Vansh Riddhimavidam ithu enna muttalthanamana video yar ithai unaku koduthargal enru keka athu ipo mukkiyam ila ithu unmaiya enru keka Vansh ila ithu poi yaro ivara thunpuruthi ipadi pesa vaithirukirargal enru Vansh solla Riddhima ama thunpuruthiyathu avarai pesa vaika matum than enru solkirar. Vansh Riddhimavidam apo nee ennai nampavillaya enru kekirar. Kabir ninaikirar Riddhimavai soolnthu irukum mayayai unal avalavu seekirathil vilakka mudiyathu ipo aval unaku ethiraga nikiral enru. Riddhima enaku ipo unmai therinchaganum ethatkaga neenga juvenile center la irunthinga enru. athukum mela ungaloda intha mounam enoda parents a neenga than kolai panininga enru katuthu enru solkirar. Enoda husband than enudaya anathaiyana intha valkaiku karanama enru theriyanum enru soli vittu pool kul irunthu veliye vara muyatchikka kal thadukki vilukirar. Vansh Riddhimavai thangi piditha padi pothum Riddhima nan ethatkaka juvenile center ponen enra unmaiyai inru reception party la solran apo neeye mudivu paniko nan thana unoda parents kolaiku karanam enru apothu nee edukum entha mudivukum nan ok intha iravu mudivedupathatkana iravu enru vansh solkirar. Riddhima atharangal ellame vansh ku ethiraga irunthal enna seyvathu enru ninaikirar. 

Riddhima marangaluku neerai ootriya padi ninaikirar Vansh inru ella unmaikalayum sola porar athanala enudaya parents dead ku ana ella kelvikalukum vidai kidaika pothu apadi irunthum enaku ethatkaka padapadappaga ullathu? vansh enoda parents dead la samanthapatu iruka koodathu enru ninaikirar. enudaya intha ennam thavaga irunthal nan vansh mela santhega pada matan enra enudaya sathiyam kooda poiyagi vidum enru ninaikirar. Vansh avarkaludaiya thirumana picture patha padi nika siya vanthu Riddhimavai pathi josikiringala enru kekirar. Siya solkirar ena ungalayum riddhimavayum rompave nesikiran. Riddhima thooimaiyana thangam ponravar. epothume ungaloda nalanila akkarai ullavar anal ipo avanga rompave kavalaiyaga irukiraga kastama iruku enru solkirar. Vansh ethukum kavalai pada vendam inru iravoda avaloda ella kavalaikalum mudinthu vidum enru soli kannadi mesai mel kaikalal adithu kaiyil kayam etpaduthukirar. Riddhima mul kutthi kayapadukirar. Riddhima ninaikirar Vansh inniku nan than judge enru soli irukaru apidi irukum pothu oru velai Vansh enudaya parents a kolai pani irunthal nan enna seyvathu? enna mudivu nan edupathu enru josikirar. ithil yar vetri pettralum nan tholvi adainthu viduvene enru ninaikirar. Riddhimavin ithayam udainthu vittathu aval rompa vethanaiyil irukiral athatku nan than karanamaga irukiren avala epidiyavathu intha vethanaiyil irunthu veliye kondu vara vendum enru Vansh ninaikirar. 

Riddhima kadavul thanudaya thalaiyil enna eluthi irukirar enru parka coin a sundi vittu thalai / poo paka ninaikirar. Oru velai enudaya payam unmaiyaga irunthal enudaiya mayaikal ellam vilagum athuve enudaya periya tholviyaga irukum enru ninaikirar. Riddhima coin ai sundi vidukirar. Siya vansh idam solkirar nan kadavulidam pirarthikirn ungalukum Riddhima kum idaiyil irukum kulapangal viraivil theera vendum enru. antha nerathil angre varukirar. Siya antha idathai vittu selkirar. Vansh angre idam pakathil irukum sivapu thuni ai vilathum padi koora Angre ithu enna enru ketapadi thuniyai edukirar. ange oru pathirathil kothikkum soodana oil irukirathu. Vansh solkirar Riddhimavin parvaiyil nan kuttravaliyaga theriyum pothu intha soodana oil eduthu than mel ootrum padi. Ishani Riddhima sundiya coin ai kaiyil edutha padi unudaiya thalaivithiyai intha coin ai vaithu theermanika vendam nee vithaithathai neeye aruvadai seyvai. Inru unudaya mudival Vansh kangalil kanner vanthal nan unudaya kangalil ratha kanner vara vaipen kathalukaka oruvan thandikapaduvathai etru kolla matan enru solkirar. Angre ithu ennal mudiyathu enru solkirar. Athatku vansh nee enaku sathiyam pani irukirai enoda kattalaikalai nirakarikka maten enru unaku ennai patri nanragave theriyum enru solkirar. Athatku Angre ithu ennal mudiyathu ennai mannithu vidungal. kandipaga ipadi oru ikkattana soolnilai uravaga koodathu enru kadavulidam pirarthipathaga solkirar. Ellame inru Riddhima edukum mudivil than irukirathu Vansh solkirar. Riddhima ninaikirar inraiya iravin irul puthiya kelvikalai uruvakki viduma enru.

Precap will be added later.

Update Credit to: Arunthathi Kanagaratnam (AK) Kanec Media

#Riddhima #VanshRaisinghania 
#Vansh #kabir #immj 
#immj2 #IshqMeinMarjawan2 
#IshqMeinmarjwan2
#helly 
#RrahulSudhir 
#vishalvashishtha 
#hellyshah 
#rrahul 
#riansh 
#IMMJ 
#IMMJ2

No comments:

Post a Comment