ரிதிமா வன்ஷிடம் வருகிறார் அப்போது வன்ஷ் கதிரையில் இருக்க அவர் செய்வதை போல தானும் எல்லாவற்றையும் செய்து கொண்டு இருக்கிறாள். வன்ஷ் சிரித்தபடி தன்னுடைய ஷட்டை கழற்றுகிறார் அப்போது ரிதிமா எதுவும் செய்ய முடியாமல் வன்ஷை பார்க்க இதை உன்னால் செய்ய முடியாது என்று சொல்ல ரிதிமா எசல்ல முயற்சிக்கிறார் அப்போது வன்ஷ் அவளைத்தடுத்து கண்டியணைக்கிறார். ரிதிமா என்பது என்னுடைய காதலின் மறுபெயர் அது என்னுடைய இதயத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று வன்ஷ் கூற அதற்கு ரிதிமா இன்னுமொரு சிறிய இடம் இல்லையா மேலும் ஓரு பெயர் எழுதுவதற்கு என்று கேட்க வன்ஷ் அங்கிருந்து செல்ல முற்படுகிறார் அப்போது ரிதிமா அவரைத்தடுத்து எனக்கு காரணம் சொல்லாமல் நீங்கள் செல்ல முடியாது எதற்காக உங்களால் நமக்கு ஒரு குழந்தையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறாமல் இங்கிருந்து செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று சொல்கிறாள். அதற்கு வன்ஷ் எனக்கு இதைப்பற்றி பேச இஷ்டம் இல்லை என்று கூறிவிட்டு செல்கிறார். சரி பறவாயில்லை இந்த விடயத்தில் நான் தோற்றுப்போக மாட்டேன் கண்டிப்பாக என்னுடைய சத்தியத்தை காப்பாற்றுவேன் என்று கூறுகிறாள். ரிதிமா குளியலறைக்கு சென்று நகத்திற்கு பூச்சு பூசுகிறார். அங்கே கையில் கத்தியுடன் வருகிறார்கள். யாரோ குளியலறைக்கதவை திறக்க ரிதிமா சென்று பார்க்கிறார். அங்கு யாருமே இல்லை.
சியா ரிதிமா மற்றும் வன்ஷிற்கு ஒரு பரிசு கொடுக்க நினைத்து அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு செல்கிறார். அங்கே அழகான குழந்தை தொட்டில் வைத்திருந்தார். அதைப்பார்த்த ரிதிமா மகிழ்ச்சியாக சியாவை கட்டியணைக்கிறார். ரிதிமா குழந்தை பொம்மை ஒன்றை காட்டுகிறார். எப்போது புதுமணத்தம்பதிகள் தாய் தந்தையாகிறார்களோ அவர்கள் இந்த குழந்தை பொம்மையை வைத்து எப்படி குழந்தையை பராமாரிப்பது என்று பழகிக்கொள்ளலாம் நானும் வன்ஷிம் பழக தான் இதை வாங்கினேன் என்று கூற சியா மிகவும் நல்லது என்று கூறிவிட்டு செல்கிறார். இதையெல்லாம் காட்டி எனக்குள் தந்தைக்குரிய உணர்வை கொண்டுவரலாம் என்று நினைக்கிறாயா இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று வன்ஷ் ரிதிமாவைக் கேட்க அவள் குழந்தை பொம்மையை வன்ஷ் கையில் கொடுக்கிறார். வன்ஷ் அந்த பெண்மணி கூறிய வார்த்தைகளை நினைத்துப்பார்த்துவிட்டு உடனே அந்த பொம்மையை ரிதிமாவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்கிறார். நான் எப்படியாவது எல்லாவற்றையும் உங்களுக்கு புரியவைப்பேன் என்று கூறியபடி சென்று தூங்குகிறார்.
திடீரென ஏதோ சத்தம் கேட்டு ரிதிமா எழுந்து பார்க்கிறார். வன்ஷ் தூங்கிக் கொண்டு இருக்கிறார். அந்த சத்தம் யாரோ லா லா லா என்று படிப்பது போல இருக்க சுற்றிப்பார்க்கிறார் ஆனால் அவர்கள் அறையில் சியா கொடுத்த தொட்டில் இல்லை. ரிதிமா எழுந்து சத்தம் வந்த இடத்தை நோக்கி செல்கிறார். மாடியிலிருந்து கீழ் நோக்கி ஹாலுக்கு செல்கிறார் அங்கு பிரதாக வாயில் கதவு திறந்து இருக்க அதை மூடிவிட்டு திரும்பிப்பார்க்கிறார் அங்கே அவள் அறையிலிருந்த தொட்டில் இருக்கிறது அங்கு சென்று பார்க்க அதற்குள் அவர்கள் வைத்திருந்து குழந்தை பொம்மை கை கால்கள் எல்லாம் கழற்றப்பட்ட நிலையில் இருக்கிறது. பதற்றமாக ரிதிமா அவற்றை எடுத்து மீண்டும் பொருத்தி வைக்கிறார். இதை உடனடியாக வன்ஷிடம் கூற வேண்டும் என்று நினைத்து செல்ல நினைக்கிறார் ஆனால் மீண்டும் யோசித்துவிட்டு வன்ஷ் இப்போது குழந்தையை நினைத்து குழப்பத்தில் இருக்கிறார் இப்போது நாங்கள் இருவரும் ஆபத்தில் இருக்கிறோம் என்று நினைத்து சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறார். எப்படியாவது இதை நானே கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்தபடி திரும்பி நடக்க அங்கே யாருடைய நிழல் தெரிவதைப்பார்க்கிறார்.
ரிதிமா அங்கே ஆங்றி நிற்பதைப்பார்க்கிறார். ரிதிமாவைப்பார்த்த ஆங்றி நீங்கள் இங்கேயா என்று கேட்க ரிதிமா அவரைப்பார்த்து நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் என்று கேட்க ஆங்றி தூக்கம் வரவில்லை எழுந்து நடந்து nகொண்டிருக்க ஏதோ பாடல் சத்தம் கேட்க இங்கே வந்ததாக கூறி உங்களுக்கும் அந்த சத்தம் கேட்டிச்சா என்று கேட்க ரிதிமா ஆங்றிக்கு உண்மை கூறினால் வன்ஷிடம் கூறிவிடுவார் என்று நினைத்து இல்லை எனக்கு தூக்கம் வரவில்லை அது தான் இங்கு சற்று நடக்கலாம் என்று நினைத்து வந்தேன் என்று கூறினார். சரி நான் தூங்க போகிறேன் என்று கூறிவிட்டு செல்கிறார். ரிதிமா ஏதோ தப்பாக தெரிகிறது யார் இப்படியெல்லாம் செய்கிறார்கள் கண்டிப்பாக இதை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
மறுநாள் காலை ரிதிமா வன்ஷிற்கு போன் பண்ணி எங்கே இருக்கிறீர்கள் நாங்கள் ஸ்கான் எடுக்க ஹாஸ்பிடல் செல்ல வேண்டும் என்று கூற வன்ஷ் காரை நிறுத்துகிறார். அப்போது ரிதிமா உங்க குழந்தை உங்களைப் போலவே மிகவும் பிடிவாதமாக இருக்கிறது என்னை 3 தடவை வாந்தியெடுக்க வைத்துவிட்டது என்று கூற சரி நீ அங்கே செல் நான் வருகிறேன் என்று வன்ஷ் கூறுகிறார். எப்படியாவது நான் வன்ஷை சமாளித்து என் வழிக்கு கொண்டு வந்து விடுவேன் என்று நினைக்கிறார். ரிதிமாவை யாரோ பின்தொடர்கிறார்கள். வன்ஷ் காருக்குள் இருந்து நான் ஸ்கானிற்கு வரபோவதில்லை எனக்கு அது பிடிக்கவில்லை. என்னுடைய குழந்தைக்கு இந்த உலகத்தில் இடமில்லை நானும் ரிதிமாவும் மகிழ்ச்சியாக வாழலாம் எதற்கு இப்போ இந்த குழந்தை ஐ லவ் யூ ரிதிமா ஆனால் நான் தந்தையாக முடியாது என்று நினைக்கிறார். அப்போது அவரிற்கு ஒரு மெசேஜ் வருகிறது.
வன்ஷ் ஆங்றிக்கு போன் செய்து நான் வந்துகொண்டிருக்கிறேன் மீற்றிங்கிற்கு ஆயத்தம் செய்யும்படி கூறுகிறார். வன்ஷ் தன்னுடைய சிறுவயது காலத்தை நினைத்துப்பார்க்கிறார். அப்போது அவரிற்கு வியர்த்து மிகவும் குழப்பமாக இருந்தது. ரிதிமாவின் கைப்பை கீழே விழ அதை கீழே இருந்து எடுக்கிறார். அருகில் இருந்த வாகனத்தை ஒருவர் ரிதிமாவை நோக்கி தள்ளி விடுகிறார் அதற்குள் மிகவும் கூர்மையான கம்பிகள் இருக்கிறது. ரிதிமா நிமிர்ந்து பார்த்துவிட்டு அதிலிருந்து விலகி தன்னைக்காப்பாற்றிக்கொள்கிறார். வன்ஷை கட்டுப்பாட்டை இழந்து கார் ஓட்டியபடி செல்ல அவரிற்கு முன்னால் ஒரு ஆட்டோ வந்து கொண்டிருக்க வன்ஷ் காரைத்திருப்பி நிறுத்துகிறார். இங்கே ரிதிமா வயிற்றில் கையை வைத்து பயப்பட வேண்டாம் நான் உனக்கு எதுவுமே ஆக விடமாட்டேன் கண்டிப்பாக நீ பாதுகாப்பாக இருப்பாய் என்று கூறி கடவுளுக்கு நன்றி சொல்கிறார். வன்ஷ் காரை விட்டு வெளியே எழுந்து வருகிறார். வன்ஷ் எங்கே என்று நினைத்தபடி ரிதிமா நிற்கிறார். வன்ஷின் கைகள் நடுங்க என்னை தனியாக விடுங்கள் எனக்கு என்னாகிறது என்று கேட்டபடி இருக்கிறார்.
Update Credit to: Arunthathi Kanagaratnam (AK) Kanex Media
#Riddhima #VanshRaisinghania
#Vansh #kabir #immj
#immj2 #IshqMeinMarjawan2
#IshqMeinmarjwan2
#helly
#RrahulSudhir
#vishalvashishtha
#hellyshah
#rrahul
#riansh
#IMMJ
#IMMJ2











No comments:
Post a Comment