Friday, 12 February 2021

Ishq Mein Marjawan 2 - IMMJ2 Episode 191 Hindi Serial 12th February 2021 written update in Tamil






அனைவரும் நடனமாடி மகிழ்ந்தபடி இருக்க இஷாணி வன்ஷ{ம் ரிதிமாவும் மகிழ்வாக இருந்து பியாணோ வாசிப்பாதை பார்த்து கோவமாக செல்ல வன்ஷ் சென்று இஷாணியை தடுத்து நாங்கள் சிறுவயதில் ஒன்றாக நடனம் பயில சென்றோம் இப்போது சேர்ந்து நடனம் ஆடினால் நன்றாக இருக்கும் என்று கூறி இஷாணியுடன் நடனமாடுகிறார். நடனமாடியபடி நீ கவலையாக இருக்கிறாய் என்று தெரியும் ஆனாலும் என்னை நம்பு கண்டிப்பாக உன்னை மகிழ்வாக வைத்திருப்பேன் என்று கூற இஷாணி பிறந்தநாள் பார்ட்டியில் நடந்தவற்றை நினைத்துப்பார்த்தபடி வன்ஷிடமிருந்து விலகி ஆங்றியுடன் சென்று நடனமாடுகிறார். வன்ஷ் விலகிச் செல்கிறார் பாட்டிம்மாவுடன் பேசிக்கொண்டிருந்த ரிதிமா இதோ வருகிறேன் என்று கூறிவிட்டு செல்கிறார். கபீர் இன்று எப்படியாவது ரிதிமாவின் தலையில் ரோஜா பூ வைத்தே ஆகணும் என்று முடிவு பண்ணிவிட்டு ரிதிமாவின் பின்னால் சென்று அவளின் தலையில் பூ வைத்துவிடுகிறார். ரிதிமா சிரித்துக்கொண்டு வன்ஷ் என்று அழைத்தபடி திரும்பிப்பார்க்க பின்னால் யாழுமே இல்லை கபீர் சென்று மறைந்து கொள்கிறார். வன்ஷ் வர ரிதிமா எங்கே சென்றீர்கள் உங்களை தான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறாள். இருவரும் இணைந்து நடனமாடுகிறார்கள். 

அனைவரும் மகிழ்வாக சிரித்தபடி அவர்களின் நடனத்தை ரசித்துக்கொண்டிருந்தார்கள். வன்ஷ் கைகளை விரித்து நிற்க ரிதிமா சிரித்தபடி நிற்கிறார். எதற்காக ரிதிமா பறவைபோல் உயர்ந்து நடனமாடவில்லை என்று நினைக்க ரிதிமா அவரை நெருங்கி என்னால் இந்த நடனத்தை ஆடமுடியாது என்று சொல்ல எதற்காக? நீ நன்றாக இருக்கிறாயா என்று கேட்க நன்றாக இருக்கிறேன் ஆனால் ஒருவரின் பாதுகாப்பு கருதி என்னால் அப்படி நடனமாட முடியவில்லை என்று சொல்கிறாள். வன்ஷ் சுற்றிப்பார்த்துவிட்டு யாருடைய பாதுகாப்பு என்று கேட்க ரிதிமா வன்ஷின் கையை வயிற்றில் வைத்து சிரித்தபடி நீங்கள் என்ன உணருகிறீர்கள் நீங்க தான் இந்த உலகின் தலைசிறந்த தந்தை என்று சொல்கிறாள். வன்ஷ் அதிர்ச்சியுடன் அந்த பெண்மணி கூறிய வார்த்தைகளை நினைத்துப்பார்க்கிறார். நீங்கள் இப்போது உலகின் மிக உயர்ந்த சந்தோசத்தை அனுபவிப்பீர்கள் என்று சொல்ல வன்ஷ் கால்களை பின்னோக்கி வைக்கிறார். என்னாச்சு வன்ஷ் என்று ரிதிமா கேட்க எதுவுமே கூறாமல் வன்ஷ் அங்கிருந்து செல்கிறார். ரிதிமா வன்ஷ் என்று அழைத்துக்கொண்டு சென்று தேடிப்பார்க்கிறார். அப்போது வன்ஷ் நிற்பதைப்பார்த்து நீங்கள் இங்கே நிக்கிறீர்களா நான் எல்லா இடமும் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் உங்களுக்கு எவ்வளவு பெரிய நல்ல செய்தியை கூறி இருக்கிறேன் ஆனால் நீங்கள் சந்தோஷமாக இல்லையே என்னாச்சு எதற்காக இந்த சந்தோஷத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டு தன்னைப்பார்க்கும் படி வன்ஷின் முகத்தை திருப்ப வன்ஷ் அவளைப்பார்க்கிறார். 

மேலும் ரிதிமா நான் நினைத்தேன் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று ஆனால் ஏதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறீர்களே அப்படியென்றால் நீங்கள் எப்படி இந்த சந்தோஷத்தை வெளிப்படுத்துவது என்று தெரியாமல் இருக்கிறீர்களா என்று கேட்கிறாள். அதற்கு வன்ஷ் என்னை தனிமையில் இருக்க விடுமாறு கூறிவிட்டு அங்கிருந்து செல்ல அதற்கு ரிதிமா எதற்காக இப்படி இருக்கிறீர்கள் என்ற காரணத்தை கூறிவிட்டு நீங்கள் சென்று தனியாக இருங்கள் அதற்கு முன் நான் கேட்ட கேள்விக்கு பதிலைக்கூறி விட்டு செல்லுங்கள் என்று சொல்கிறாள். வன்ஷ் ஏதுமே சொல்லாமல் செல்ல உங்களின் பதில் கிடைக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று ரிதிமா கூறி அதிலிருக்கும் மெழுகுவர்த்தி சுவாலை மேல் கையை வைத்தபடி இருக்கிறார். வன்ஷ் திரும்பிப் பார்த்துவிட்டு ஓடி வந்து ரிதிமாவை அவளின் கைக்கு முதலுதவி பண்ணுகிறார். அப்போது ரிதிமா உங்களின் மௌனம் என்னை ரொம்பவே காயப்படுத்துகிறது நாங்கள் தாய் தந்தையாக போகிறோம் இது எங்கள் வாழ்வின் மிகப்பெரிய சந்தோஷம் அதாவது எங்களின் வாழ்க்கை புதிய இடத்திற்கு செல்கிறது என்று சொல்கிறாள். வன்ஷ் அமைதியாக நிக்கிறார். நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்கள் என்னுடன் உங்கள் வாழ்க்கையை கடைசிவரைக்கும் வாழ நினைக்கிறீர்கள் ஆனால் நமக்காக குழந்தை மட்டும் வேண்டாமா? அதை நினைத்து நீங்கள் சந்தோஷமாக இல்லையா? என்று கேட்க வன்ஷ் நிறுத்து ரிதிமா என்று சற்று கோவமாக என்னால் இந்த தந்தை என்னும் பொறுப்பை நிறைவேற்ற முடியாது என்று சொல்கிறார். 

ரிதிமா வன்ஷை தன் கண்களைப்பார்க்கும்படி சொல்கிறார். உங்களால் இந்த பொறுப்பை நிறைவேற்ற முடியும் நீங்கள் தானே கூறினீர்கள் ராகினிக்கு அப்புறம் உங்களுக்கு காதல் மேல் நம்பிக்கை இல்லை காதலிக்க பிடிக்கவில்லை என்று ஆனால் இப்போது என்னை உயிராக காதலிக்கிறீர்கள் உங்கள் கணவனுக்கான கடமைகளை சரியாக செய்கிறீர்கள் என்னால் உங்களை நல்ல தந்தையா மாற்ற முடியும் என்று சொல்கிறாள். அதற்கு வன்ஷ் உனக்கு என்னுடைய கடந்தகாலத்தைப்பற்றி தெரியாது என்று கூற அதற்கு ரிதிமா நான் சொல்வதைக் கேளுங்கள் நீங்கள் தானே எப்போதும் கூறுவீர்கள் நம்முடைய கடந்தகாலம் எப்படி இருந்தாலும் பறவாயில்லை நம்முடைய எதிர்காலத்தில் நாங்கள் சிறந்த அம்மா அப்பா என்று கூற அதற்கு வன்ஷ் எனக்கு தந்தையாவதற்கு இஷ்டமில்லை என்று கூறிவிட்டு செல்கிறார். மறுநாள் காலை ரிதிமா குளியலறையிலிருந்து மிகவும் சோர்வாக வருகிறார். மீணடும் சென்று வாந்தியெடுக்கிறார் அப்போது வன்ஷ் நீ நன்றாக இருக்கிறாயா என்று கேட்க ரிதிமா கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்து வயிறு வலியாக உள்ளது டாக்டரை வரவழைக்கும்படி கூறுகிறாள். வன்ஷ் ரிதிமாவை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு டாக்டருக்கு போன் பண்ணுகிறார்.

டாக்டர் ரிதிமாவை பரிசோதித்துவிட்டு எதற்கும் கவலைப்பட வேண்டாம் தாயும் குழந்தையும் நன்றாக இருக்கிறார்கள். கர்ப்ப காலத்தில் இப்படி ஏற்படுவது சஜயம் தான் நன்றாக ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் ரிதிமாவை அழைத்துக்கொண்டு சில பரிசோதனைக்காக வைத்தியசாலை வரும்படி சொல்ல வன்ஷ் சரி என்று கூற டாக்டர் செல்கிறார். வீட்டிலுள்ள அனைவரும் ரிதிமாவின் அறைக்கு வருகிறார்கள். சியா எதற்காக டாக்டர் வந்தார் என்று கேட்க அதற்கு இஷாணி அவர் மகப்பேற்று நிபுணர் நான் கர்ப்பமாக இருந்தபோது பார்த்தேன் என்று சொல்ல பாட்டிம்மா எனக்கு புரிந்துவிட்டது ரிதிமா கர்ப்பமாக இருக்கிறாள் என்று கூறி அவளை கட்டிணைத்து முத்தமிடுகிறார். அனைவரும் ரிதிமாவைப்பார்த்தபடி நிற்கிறார்கள். இஷாணி கைகளை தட்டியபடி வாழ்த்துக்கள் அண்ணா என்கிறாள். சியா நான் அத்தையாக போகிறேன் எனக்கு இலவசமாக விளையாட்டு பொருட்கள் கிடைத்துவிடும் வாழ்த்துக்கள் என்று சொல்கிறார். பாட்டிம்மா ரிதிமாவை ஓய்வெடுக்கும் படி சொல்கிறார். வன்ஷிடம் ரிதிமாவை பார்த்துக்கொள்ளும் படி கூறிவிட்டு செல்கிறார். வன்ஷ் ரிதிமாவைப் பார்க்கிறார். 

ஆரியன் கோவமாக ரிதிமா மற்றும் வன்ஷின் போட்டோவை காயப்படுத்துகிறார். வன்ஷின் குழந்தை இந்த உலகத்திற்கு வந்தால் அவனுடைய எல்லா சொத்துக்களும் குழந்தைக்கு சென்றுவிடும் என்னுடைய எல்லா திட்டங்களும் வீணாகி போய்விடும் அதனால் அவனுடைய குழந்தை இந்த உலகத்தைப்பார்க்க கூடாது என்று சொல்கிறார். இஷாணி பிறந்தநாள் விழாவில் வன்ஷ் ரிதிமாவை காப்பாற்றியதை நினைக்கிறார் அப்படியென்றால் ரிதிமா கர்ப்பமாக இருந்தமையால் அவர் என்னுடைய குழந்தையை பலி கொடுத்து ரிதிமாவின் குழந்தையை காப்பாற்றியிருக்கிறார் இப்போ ரிதிமா எனக்கு சொல்லும் நற்செய்தி என்னுடைய குழந்தை உயிரைப்பறித்து அவளுடைய குழந்தையை வாழ வைத்திருப்பது. ரிதிமாவும் வன்ஷிம் என்னை ஏமாற்றிவிட்டார்கள் அதனால் ரிதிமா சந்தோஷமாக இருக்க கூடாது என்று நினைக்கிறாள். பாட்டிம்மா ரிதிமாவின் கையில் மருதாணி போட்டு விட்டு உனக்கு விரும்பியதை சாப்பிட்டு உடல்நிலையை கவனமாக பார்த்துக்கொள்ளும் படி சொல்கிறார். சாஞ்சல் கோவமாக ரிதிமாவுக்கு குழந்தை பிறந்தால் ஆரியனுக்கு எந்த உரிமையும் கிடைக்காது என்று புலம்பியபடி காய்கறிகளை வெட்டுகிறார். அப்போது கத்தி அவரின் கையை வெட்ட ரத்தம் வருகிறது அதைப்பார்த்து இந்த இரத்தம் தான் இந்த பிரச்சினைக்கான தீர்வு என்று நினைக்கிறார். சியா பாட்டிம்மா ரிதிமாவுக்கு போட்ட மருதாணியை பார்த்து அழகாக இருக்கிறது போட்டோ எடுக்கலாம் என்று கூறி படங்கள் எடுத்து மகிழ்வாக இருக்கிறார்கள். ரிதிமா எப்படியாவது வன்ஷ் தன்னுடைய குழந்தையை ஏற்றுக்கொள்ள ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்திக்கிறார். இவற்றைப்பார்த்து கொண்டிருந்த கபீர் எனக்கு நன்றாக தெரியும் வன்ஷ் இந்த குழந்தையை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார் அதனால் விரைவில் நீ என்னிடம் வந்துவிடுவாய் என்று நினைக்கிறார்.

Update Credit to: Arunthathi Kanagaratnam (AK) Kanex Media

#Riddhima #VanshRaisinghania 
#Vansh #kabir #immj 
#immj2 #IshqMeinMarjawan2 
#IshqMeinmarjwan2
#helly 
#RrahulSudhir 
#vishalvashishtha 
#hellyshah 
#rrahul 
#riansh 
#IMMJ 
#IMMJ2

No comments:

Post a Comment