ரிதிமா வன்ஷிடம் நாங்கள் குழந்தையை கையில் ஏந்தும் நாளை ஆவலாக எதிர்பார்ப்பதாக கூறுகிறாள். நீங்கள் ஒரு முக்கியமான பொழுதை தவற விட்டு விட்டீர்கள் ஆனால் நான் அதை பதிவு செய்து கொண்டுவந்துள்ளேன் எனறு கூறி தான் பதிவு செய்து வந்த குழந்தையின் இதய துடிப்பு சத்தத்தை வன்ஷ் கேட்க வைக்கிறார். இருவரும் அழுகிறார்கள். உங்களை இந்த உலகின் சிறந்த தந்தையாக வர வைப்பேன் என்று ரிதிமா கூற வன்ஷ் கண்ணீரை துடைத்துவிட்டு கட்டிலில் படுக்கிறார். ரிதிமாவும் படுத்திருந்து யோசிக்கிறார் வன்ஷை குழந்தையிடமிருந்து தூர செல்ல வைக்கும் விடயம் என்ன? எதற்காக இத்தனை பயம் கலந்த குழப்பமாக இருக்கிறார் என்று நினைக்கிறாள். வன்ஷ் குழந்தையின் இதயத்துடிப்பு மற்றும் ஸ்கான் றிப்போட் எல்லாவற்றையும் யோசித்துப்பார்த்தபடி தூங்குகிறார். மறுநாள் காலை ருத்ரா சஞ்சலுக்கு நெக்லஸ் பரிசளிக்கிறார். என்ன இத்தனை சந்தோஷம் என்று கேட்க ருத்ரா பாடல் பாடி சஞ்சலை மகிழ்விக்கிறார். அவருடைய கழுத்தில் நெக்லஸ் அணிந்து காதலர் தின வாழ்த்து சொல்கிறார். அதற்கு சஞ்சல் என்னுடைய முதல் காதலே நகை தான் அதையே பரிசளித்துள்ளீர்கள் நீங்கள் என்னுடைய 2வது காதல் என்று கூறி நன்றி சொல்கிறார்.
இஷாணியும் ஆங்றியும் வருகிறார்கள். இஷாணி எதற்காக படத்தை பாதியில் நிறுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தீர்கள் என்று கேட்க ஆங்றி கீழே அமர்ந்து இஷாணிக்கு ரோஜா பூ கொடுத்து காதலர் தின வாழ்த்து சொல்கிறார். இஷாணியும் பதிலுக்கு வாழ்த்து கூற ஆங்றி அவருக்கு மோதிரம் அணிவிக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைக்கிறார்கள்.
வன்ஷ் ரிதிமாவை பிடிக்க ரிதிமா பயந்து போய் என்னை பயமுறுத்தி விட்டீhகள் என்று சொல்கிறார். அதற்கு வன்ஷ் இது பழைய ஜோக் என்று கூறி இன்று நீ பயந்து தான் ஆக வேண்டும் ஏனென்றால் நான் உன்னை கடத்த போகிறேன் என்று சொல்கிறார். அதற்கு ரிதிமா கடத்த போகிறீர்களா? என்னை கடத்துறது அவ்வளவு எளிதானதா? என்னுடைய கணவரைப்பற்றி தெரிந்தால் உங்களுடைய முடிவை மாற்றிவிடுவீர்கள் அவர் எனக்கு எப்படி எதிரிகளிடமிருந்து தற்காத்து கொள்வது என்று பயிற்சியளித்துள்ளார் என்று சொல்கிறாள். வன்ஷ் சிரித்தபடி பல்லி என்று கூற ரிதிமா சத்தமிட்டபடி எங்கே பல்லி அதை முதலில் அங்கிருந்து அகற்றும் படி கூறி வன்ஷை கட்டியணைக்கிறாள். அப்போது வன்ஷ் உன்னுடைய கணவர் உனக்கு பயிற்சியளித்ததில் தவறிளைத்துவிட்டார் அவர் உனக்கு எவ்வாறு கடத்தல்காரர்களை கையாள்வது என்று தான் கூறியிருக்கிறார் ஆனால் அவர்கள் வைத்திருக்கும் இப்படியான சில வழிமுறைகளைப்பற்றி பயிற்சியளிக்க தவறிவிட்டார் என்று கூறுகிறார். ரிதிமா சிணுங்கியபடி நிற்க வன்ஷ் அவளுடைய கையில் முத்தமிட்டுவிட்டு கீழே இருந்து அவளிற்கு காதலர் தின வாழ்த்து சொல்கிறார். இன்று மாலை நான் உன்னை கடத்தி ஒரு அழகான இடத்திற்கு கொண்டு செல்ல போகிறேன். அங்கே நீயும் நானும் மட்டும் தான் இருப்போம் வேறு உறவுகளுக்கு இடமில்லை என்று வன்ஷ் கூற அதற்கு ரிதிமா வன்ஷின் கைகளை கோர்த்தபடி என்னை நீங்கள் கடத்திச் செல்வதற்கான நேரத்திற்காக ஆவலாக காத்திருக்கிறேன் என்று கூற இருவரும் கட்டியணைத்துக் கொள்கிறார்கள். அவர்களை வெளியிலிருந்து யாரோ ஒருவர் கண்காணித்துக்கொண்டிருந்தார்.
ரிதிமா சாமிக்கு விளக்கேற்றி வணங்கிவிட்டு கடந்த இரண்டு விபத்துக்களும் என்னை மிகவும் அச்சுறுத்திவிட்டது. வன்ஷ் தந்தையாவதற்கு எதற்காக அச்சமாக உள்ளார் என்றும் தெரியவில்லை. ஆனாலும் இன்று காதலுக்கான நாளில் எங்கள் குழந்தையை பற்றி வன்ஷிடம் எதுவும் பேச வேண்டாம் என்று முடிவு பண்ணுகிறார். அங்கிருந்து செல்ல நினைக்கையில் ரிதிமாவின் துப்பட்டா பட்டு விளக்கு அணைகிறது அதை பார்க்கமால் ரிதிமா செல்கிறார். அங்கே ஒரு துண்டு சீட்டு இருக்கிறது. அதில் மாலை உனக்கான பரிசு பூந்தோட்டமருகே இருப்பதாக எழுதியிருந்தது. இது வன்ஷின் சப்றைஸ் தான் என்று மகிழ்ந்த ரிதிமா அங்கிருந்து செல்கிறார். சிவப்பு கையுறை அணிந்தவர் அவற்றை பார்த்தபடி நிற்கிறார். ரிதிமா உடைமாற்றி வன்ஷிற்காக கீழே வருகிறார். அங்கே சியா இருந்து என்ன இன்று ரொம்பவே அழகாக இருக்கிறீர்கள் என்று கேட்க வன்ஷ் காதலர்தின சப்றைஸிற்காக தன்னை பூந்தோட்டத்திற்கு அழைத்திருப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து பூந்தோட்டத்திற்கு செல்கிறார். போகும் வழியில் ஆரியனுடன் மோதுகிறார் ஆரியன் மன்னிப்பு கேட்கிறார். காதலர் தின வாழ்த்துக்கள் கூறி விட்டு திரும்ப அவரின் பொக்கற்றிலிருந்து சிவப்பு நிற கையுறை கீழே விழுகிறது. ரிதிமா சென்றதும் அதை எடுத்து வைக்கிறார். சஞ்சல் தோட்டத்தில் பூ மரக்கன்றுகளை வெட்டியபடி நிற்கிறார். இஷாணி தோட்டத்தில் சிவப்பு நிறத்தில் ஏதோ புதைத்தபடி நிற்கிறார். ரிதிமா தோட்டத்திற்கு சென்று பார்க்கிறார் அங்கே யாரும் இல்லை வன்ஷ் என்று அழைத்தபடி செல்ல பின்னாலிருந்து ஒருவர் ரிதிமாவின் கண்களையும் கைகளையும் கட்டுகிறார். ரிதிமா வன்ஷ் இப்படியா சப்றைஸ் சரி சீக்கிரமாக என்னை அழைத்து செல்லுங்கள் என்று சொல்கிறார். கை கட்டும் போது ரிதிமாவின் வளையல் உடைந்து நிலத்தில் விழுகிறது.
வன்ஷ் ரிதிமாவை அறையில் தேடிப்பார்க்கிறார் அங்கே இல்லையென்றதும் கீழே வருகிறார். அங்கு சியா அவர் வன்ஷின் சப்றைசிற்கக தோட்டத்திற்கு சென்றதாக கூறுகிறார். வன்ஷ் தான் ரிதிமாவை அழைக்கவில்லையே என்று நினைத்தபடி தோட்டத்திற்கு செல்கிறார். ரிதிமாவின் கைகளையும் கண்களையும் கட்டியவா ரிதிமாவை காரில் ஏற்றுகிறார். தானும் ஏறி உட்காருகிறார். ரிதிமாவுடன் காரில் அமர்ந்தது கபீர் இன்று என்னுடன் தான் உன் காதலர் தினம் என்று நினைத்தபடி கபீர் காரை ஸ்டாட் செய்கிறார்.
வன்ஷ் தோட்டத்தில் ரிதிமாவை தேடுகிறார் அங்கே அவரின் உடைந்த வளையல்களை பார்க்கிறார். எப்படியாலது நான் ரிதிமாவை காப்பாற்றுவேன் என்று கூறியபடி வளையல்களைப்பார்க்கிறார்.
Update Credit to: Arunthathi Kanagaratnam (AK) Kanex Media
#Riddhima #VanshRaisinghania
#Vansh #kabir #immj
#immj2 #IshqMeinMarjawan2
#IshqMeinmarjwan2
#helly
#RrahulSudhir
#vishalvashishtha
#hellyshah
#rrahul
#riansh
#IMMJ
#IMMJ2


















































